190 பேருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலி

0
13

டுபாயிலிருந்து 190 பேருடன் பயணித்த இந்திய விமானம் கேரளாவின் கோழிக்கோட் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.

குறித்த பகுதியில் நேற்றிரவு பெய்த கடும் மழையுடனான காலநிலையுடன் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக டுபாயில் சிக்கியிருந்தவர்களை நாட்டுக்கு அழைத்து வந்த விமானம், கோழிக்கோட் விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் இரண்டு பாகங்களாக பிளவடைந்துள்ளது.

விமானம் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில், 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகளும், 2 விமானிகள் உட்பட 4 பணிக்குழாம் உறுப்பினர்களும் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு விமானிகள் உட்பட 17 பேர் பலியானதுடன், 112 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் விமானம் இரண்டு பாகங்களாக பிளவடைந்தமையினால், சுமார் மூன்று மணிநேர மீட்புப் நடவடிக்கையில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 112 பேரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.