20 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – தீவிர விசாரணையில் பொலிஸ்

0
124

இந்தியாவில் திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அவதீஷ் குஜார். காவலராக பணிபுரிகிறார். இவர் மனைவி சப்னா (20). இந்த தம்பதிக்கு விராட் என்ற 2 வயதில் குழந்தை உள்ளது.

அவதீஷ் நேற்று பணிமுடிந்து மாலையில் தாமதமாக வீட்டுக்கு வந்தார், பின்னர் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கினார்.

நள்ளிரவில் கழிப்பறைக்கு செல்வதற்காக அவதீஷ் எழுந்த போது அருகில் மனைவி சப்னா இல்லாததை கண்டுள்ளார்.

பின்னர் பக்கத்து அறைக்கு சென்ற போது சப்னா தனது புடவையில் தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார் அவதீஷ்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் சப்னாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் கூறுகையில், மகன் விராட் பிறந்தநாளை இரு தினங்களுக்கு முன்னர் தான் தம்பதி கொண்டாடியுள்ளனர்.

அப்போது சப்னா மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்.

இந்த இரண்டு நாளில் அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.