2020ம் ஆண்டு வாக்காளர் பதிவில் தமது பெயர் இருக்கிறதா? என்பதை பரீட்சித்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
பொதுமக்கள் தமது கிராமசேவகர்களிடம் இதனை பரீட்சித்துப் பார்க்கலாம் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அல்லது (www.elections.gov.lk)என்ற இணையத்தளத்தில் அதனை பரீட்சிக்க முடியும்.
இது தொடர்பில் ஏதாவது முறைப்பாடுகள் இருப்பின் பொதுமக்கள் 0112860031 என்ற தொலைபேசி எண்ணுடன் 2021 ஜனவரி 19ம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொண்டு அறிவிக்கமுடியும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.