2020 ராகு பெயர்ச்சியால் செப்டெம்பர் மாதம் முதல் அமோக யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் இவர்கள்தான்

0
3324

சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி போல மக்கள் ராகு கேது பெயர்ச்சியையும் மிக அதிகமாக எதிர்பார்க்கின்றனர். மிதுனம் ராசியில் உள்ள ராகு பகவான் வரும் செப்டம்பர் மாதம் முதல் ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்து ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரிக்கப் போகிறார். இந்த ஒன்றரை ஆண்டுகாலம் எந்த ராசிக்காரர்களுக்கு லாபங்களும். பண வரவும் ராஜயோகமும் வரப்போகிறது என்று பார்க்கலாம்.

ராகு பகவான் தற்போது கால புருஷ தத்துவத்தின் படி மிதுனம் ராசியான மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த கிரக சஞ்சாரத்தினால் எத்தனையோ பிரச்சினைகளை மக்கள் சந்தித்து இருக்கிறார்கள். இனி சுக்கிரன் வீடான ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் ராகு நிறைய நன்மைகளை கொடுக்கப் போகிறார்.

ராகு பகவான் இடப்பெயர்ச்சியால் மேஷம், கடகம், துலாம், மீனம் ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப் போகிறது. இதுநாள்வரை பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித்தவித்தவர்கள் கூட இனி திடீர் அதிர்ஷ்டம் மூலம் பண மழையில் நனையப்போகிறீர்கள்.

மேஷம் பணவரவு

ராகு பகவான் மேஷம் ராசி, மேஷம் லக்னகாரர்களுக்கு மூன்றாம் வீட்டில் இருந்து இரண்டாம் வீடான தன குடும்ப ஸ்தானத்தில் ராகு அமர்கிறார். பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். ராகு அள்ளிக்கொடுக்கப் போகிறார். எதை தொட்டாலும் நஷ்டமாக இருக்கே நாம எப்போ கோடீஸ்வரர் ஆகப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்த உங்களுக்கு இந்த ராகு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. ஒன்றரை வருடத்தில் நீங்க உங்க வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கப் போகிறீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் மூலமும், லாட்டரி டிக்கெட் மூலமும் திடீர் யோகம் வரப்போகிறது

கடகம் லாபம்

கடகம் சந்திரனின் வீடு. சந்திரனுக்கும் ராகுவிற்கும் ஆகாதுதான் என்றாலும் ராகு அமரப்போகும் இடம் லாப ஸ்தானம். 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் ராகு வரப்போவது சிறப்பு. செய்யும் தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் வரும். ராகு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி கடகம் ராசி, கடக லக்னகாரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். புதையல், லாட்டரி டிக்கெட் பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் திடீர் பணவரவு வரும்.

துலாம் திடீர் யோகம்

துலாம் ராசி சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற ராசி, செப்டம்பர் மாதம் நிகழப்போகும் ராகு பெயர்ச்சியால் துலாம் ராசி, லக்னகாரர்களுக்கு திடீர் பணவரவு வரப்போகிறது. உங்க ராசி அதிபதி சுக்ரன் வீட்டில் ராகு அமர்கிறார். எட்டாம் வீட்டில் சுக்கிரன் வீட்டில் ராகு அமர்வது ராஜ யோகத்தை கொடுக்கும். நீண்ட நாள் சேமிப்பு, பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம், முன்னோர்கள் சொத்துக்கள் மூலம் பணவரவு வரப்போகிறது.

மீனம் லட்சியம் நிறைவேறும்

மீனம் ராசி, மீன லக்ன காரர்களுக்கு ராகு மூன்றாம் வீட்டிற்கு வருகிறார். முயற்சி ஸ்தானத்தில் ராகு அமர்வது அற்புதம். உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நீங்க நினைத்தது நிறைவேறும் உங்க லட்சியங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு வரப்போகும் சோதனைகளை சாதனைகளாக்குவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை தைரியம் கூடும். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு ராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறைய நன்மைகளையும் லாபத்தையும் தரப்போகிறார்.