25 வயது பெண்ணை திருமணம் செய்த 70 வயது முதியவர்

0
46

அசாம் மாநிலத்தினை சேர்ந்த 70 வயது தொழிலதிபர் ஒருவர், 25 வயது பெண்ணை திருமணம் செய்தது சமூக வலைதளங்களில் பரபரப்பாகியுள்ளது.

அசாமை சேர்ந்த கோடீஸ்வரர் ராஜேஷ்குமார் ஹிமாத்சின்கா, இவரது மனைவி இறந்ததையடுத்து, தன்னை விட 45 வயது வித்தியாசம் உள்ள இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் பேஸ்புக்கில் வைரலாகவே, நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், இவரின் பெயரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனரின் பெயரின் ஒரே மாதிரி இருந்ததால், சமூக வலைதளங்களில் குழப்பங்கள் ஏற்பட்டது.

ஆனால், ராஜேஷ்குமார் அசாமைச் சேர்ந்த தொழிலதிபர் என்பதும், ஹிமத்சின்கா மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் என்பதும் பின்னர் தெரிய வந்தது.

இவருக்கு அசாமைத் தவிர்த்து, மற்ற மாநிலங்களிலும் விவசாயம், மருத்துவமனைகள், ரியல் எஸ்டேட் என பல தொழில்களும் உள்ளன.

இந்த திருமணம் குறித்து ராஜேஷ்குமாரின் உறவினர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில், தனது மனைவியின் இறப்புக்கு பின்னர் அவருக்கு ஒரு துணை தேவைதான்.

ஆனால், அதற்காக தனது பேத்தியை விட இளம் வயது பெண்ணை அவர் திருமணம் செய்திருப்பது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.