27ஆம் திகதியே பாடசாலைகள் ஆரம்பம்!

0
23

கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டள்ளது.

ஜூலை 27ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கும் வாரத்தில், 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு வர வேண்டும். தேர்தல் முடிந்த பின்னர், ஓகஸ்ட் 10, திங்கட்கிழமை பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை ஆரம்பிக்க பொருத்தமான நேரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கல்வியமைச்சிற்கு பரிந்துரைத்துள்ளார்.

இருப்பினும், ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் ராஜங்கணை மற்றும் வெலிக்கந்த கல்வி வலயங்களில் எந்த பாடசாலைகளையும் திறக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெரும்பான்மையான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர், க.பொ.த. உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான திய திகதிகளை திங்கள்கிழமை (ஜூலை 20) அறிவிக்க கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.