400 உறுப்பினர்களுடன் 25 குற்றக் கும்பல்கள்… பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0
16

மேல் மாகாணத்தில் சுமார் 400 உறுப்பினர்களுடன் குறைந்தது 25 குற்றக் கும்பல்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 கும்பல்களில் மொத்தம் 388 உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாகவும், 20 கும்பல்கள் அதிக செயலில் உள்ள குற்றக் கும்பல்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்து குற்றங்களையும், கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து கொழும்பில் நடைபெற்ற செயலமர்வில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால், அவர்கள் இன்னமும் தங்கள் போதைப்பொருள் வியபாரம் அல்லது பாதாள உலக நடவடிக்கைகளை நடத்துவதே ஆகும்.

388 பேரில் 346 நபர்கள் இன்னும் செயலில் உள்ளனர். அந்த கும்பல்களில் 123 பேர் பிணையில் வெளியில் உள்ளனர். ​​

பிணையில் உள்ளவர்கள் பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே, குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள 16 நபர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, 25 பேர் வெளிநாட்டில் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.