5 இலட்சம் வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தார் மஹிந்த ராஜபக்ச

0
136

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ 199,203 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பொதுஜன முன்னணியில் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் வருமாறு.

ரத்னசேகர- 141,991
தயாசிறி ஜயசேகர- 112,452
அசங்க நவரதன்- 82,779
சமன்த ஹேரத்- 66,814
டி.பி.ஹேரத்- 61,954
அனுர பிரியதர்ஷய யாப்பா- 56,666
ஜயரத்ன ஹேரத்- 54,351
ஷாந்த பண்டார- 52,086
யு.கே.சுமித்- 51,134

ஐக்கிய மக்கள் சக்திக்கு குருநாகல் மாவட்டத்தில் 4 ஆசனங்கள் கிடைத்துள்ளது. அதில் அதிகளவான வாக்குகளை நளின் பண்டார பெற்றுள்ளார். அவர் 75,631 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஏனைய வேட்பாளர்களின் விபரங்கள் இதோ…

ஜே.சீ.அலவத்துவல- 65,956
அஷோக் அபேசிங்க- 54,512
துஷார இதுனில்- 49,364