60 ஆண்டுகளின் பின் இலங்கை அரச நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்

0
17

அரச நிறுவனங்களில் நடைபெறும் பொது மக்கள் சந்திப்பு தினத்தை ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார். இதுவரையில் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் பொது மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

சுமார் 60 வருடங்களாக புதன் கிழமையே பொது மக்கள் சந்திப்பு தினமாக நடைமுறையில் இருந்தது. தற்போது அந்த சந்திப்பு தினம் திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்த புதிய முறை நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்படி சகல அரச நிறுவனங்களிலும் கடமையாற்றும் அதிகாரிகள் பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கட்டாயம் அந்தந்த நிறுவனங்களில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.