ஃபெங் சூயி நாணயங்களை வீட்டின் இந்த இடத்தில் வைத்தால் செல்வம் அதிகமாக சேரும்

0
52

ஃபெங் சூயி என்பது 5000 வருடம் பழமையான சீன ஜோதிடத்தின் கிளையாகும். இது மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும் மற்றும் சிறப்பான விஷயங்களை அடையவும் உதவுகிறது. இந்த பழங்கால அறிவியலின் படி, மனிதகுலத்தில் வாழ்க்கை சக்தி நீர் (ஃபெங்) வழியாக பரவுகையில், பல்வேறு உயிரினங்களைச் சுற்றியுள்ள ஆற்றல் காற்று (சூயி) மூலம் விநியோகிக்கப்படுகிறது.

சிரிக்கும் புத்தர் மற்றும் அதிர்ஷ்ட மூங்கில் போன்றவை ஃபெங் சூயி கீழ் உள்ள சில பொதுவான அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் பொருட்களாகும். அத்துடன் சீன நாணயங்களுக்கும் சம முக்கியத்துவம் உண்டு. இந்த நாணயங்கள் செல்வத்தின் ஆதாரமாகக் கருதப்படுகின்றன. மேலும் ஃபெங் சூயி கொள்கைகளின் படி, இந்த நாணயங்களை வீடுகளில் வைத்திருந்தால், அந்த வீட்டில் செல்வம் செழிக்கும்.

சீன நாணயங்கள் ஒரு தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளன. அவை மையப் பகுதியில் சதுர வடிவிலான துளையைக் கொண்டவை. மேலும் நாணயத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

நாணயத்தில் உள்ள சதுர துளை பூமியின் கடத்தும் சக்திகளைக் குறிக்கும். அதே வேளையில் நாணயத்தின் நான்கு சீன உருவங்களைக் கொண்ட பக்கமானது ‘யாங்’ என்று அழைக்கப்படுகிறது. இது ஆற்றலைக் குறிக்கிறது. மறுபுறம் இரண்டு உருவங்களுடன் ‘யின்’ என்று அழைக்கப்படுகிறது.

சீன நாணயங்களை அடுக்கி வைக்கும் போது, ‘யாங்’ பக்கம் மேல் நோக்கி இருக்குமாறு அடுக்கி வைக்கப்படுகின்றன. சூரியனின் கதிர்கள் நேரடியாக யாங் பக்கத்தில் விழும் போது, அதை வைத்துள்ள இடம் செல்வ செழிப்புடன் இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு அடுக்கி வைக்கப்படுகின்றன.

செம்பு, வெண்கலம் மற்றும் பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்ட சீன நாணயங்கள் செல்வத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் இந்த நாணயங்களை சிவப்பு ரிப்பன் கொண்டு மூன்று, ஆறு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து கட்டி, லாக்கர் அல்லது பணப்பையில் வைக்க வேண்டும்.

சீன ஜோதிடத்தின் படி, மூன்று நாணயங்களைக் கட்டுவது மூன்று விதமான செழிப்பைக் குறிக்கின்றன. ஆறு நாணயங்கள் பரலோக ஆசீர்வாதங்களையும், ஒன்பது நாணயங்கள் இயற்கையின் செல்வத்தை மனிதனுடன் இணைக்கின்றன.

இந்த நாணயங்களை பரிசாக வழங்கும் போது, கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் இருவரும் அதிர்ஷ்டசாலியாக மாறுவார்கள் என்றும் ஃபெங் சூயி கூறுகிறது. மேலும் ஒற்றை நாணயங்களை கூட வைக்கலாம். ஆனால் அப்படி வைக்கும் போது அதில் சிவப்பு ரிப்பன் கொண்டு கட்டி வையுங்கள். இதனால் நன்மைகள் இரட்டிப்பாகும்.

ஃபெங் சூயி படி, சீன நாணயங்கள் வணிக நிறுவனங்களில் வைக்கப்படும் போது, அவை அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவுகின்றன. இதன் விளைவாக வணிக ஏற்றம் மற்றும் தொழில்முனைவோர் செல்வந்தர்களாக மாறுவார்கள்.

இப்போது செல்வ செழிப்பை அதிகரிக்க சீன நாணயங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் எங்கெல்லாம் வைக்கலாம் என்பதைக் காண்போம்.

வீட்டின் நுழைவாயிலில் இருக்கும் மிதியடி அல்லது கார்பெட்டின் கீழ் சீன நாணயங்களை வைக்கலாம். இதனால் அதிர்ஷ்ட நாணயங்கள் உங்கள் வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும்.

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள தொலைப்பேசி அல்லது பயன்படுத்தும் மொபைல் போனுக்கு அடியிலும் வைக்கலாம். இதனால் அந்த நாணயங்களால் அதிர்ஷ்டம் எப்போதும் உங்கள் பக்கம் இருக்கும்.

உங்கள் பர்ஸில் பணம் இருக்கமாட்டீங்குதா? அப்படியானால் மூன்று சீன நாணயங்களை சிவப்பு ரிப்பன் கொண்டு கட்டி, பர்ஸினுள் வையுங்கள். இதனால் எப்போதும் உங்கள் பர்ஸில் பணம் இருந்தவாறு இருக்கும்.

மொத்தத்தில், பண்டைய சீன நாணயங்களை நம்பிக்கையுடன் வாங்கினால் பல மடங்கு நன்மைகள் கிடைக்கும். எனவே நம்பிக்கையுடன் எதையும் செய்யுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.