அக்கறைப்பற்று பிரதேசம் இன்று முதல் பொலிஸ் பிரிவு கண்காணிப்பு

0
8

அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவு இன்று முதல் தீவிர கண்காணிப்பு வலயமாக அடையாளப்படுத்த கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவின் ஆதரவை பெற்று மக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுகிறார்களா என தீவிர கண்கானிப்பில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அக்கறைப்பற்று பிரதேசத்தில் தற்போது வரையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அக்கறைப்பற்று பிரதேசத்தில் 58 கொரோனா நோயாளிளகள் அடையாளம் காண்ப்பட்டுள்ள நிலையில் கல்முனை பிரதேசத்தில் 86 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவை இயக்குனர் தெரிவித்துள்ளளார்.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவில் வாழும் எந்த ஒரு நபரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என ஆளுநர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த பிரதேசத்திற்கு தேவையான உணவு பொருட்களை நடமாடும் சேவை ஊடாக விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.