அடுத்தவாரம் மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் தடை..

0
7

அடுத்தவாரம் மாவீரர் நாள் அனுஷ்ட்டிப்புக்கு சில நபர்களுக்கு மன்னார் மற்றும் வவுனியா நீதிமன்றங்கள் தடை விதித்திருப்பதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும், வவுனியாவில் 8 பேருக்கும் இந்த நினைவேந்தலில் ஈடுபட தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

காவற்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றங்கள் இந்த தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளன.

அதேநேரம், யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் உட்பட்ட காங்கேசந்துறை காவற்துறைப் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக்கோரி, மல்லாகம் நீதிமன்றில் காவற்துறையினர் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை நாளை பிற்பகல் 2 மணி வரையில் பிற்போடப்பட்டுள்ளது.