அடுத்த லெவலுக்கு முன்னேறிய நித்தி..? அது மட்டும் உண்மையா இருந்தா அப்றம் ஆல பிடிக்கவே முடியாது!

0
128

வேற லெவலுக்கு போய் கொண்டிருக்கிறார் நித்யானந்தா.. தனி நாடு உருவாக்க போகிறேன் என்று சொன்னபோதே இவரை என்ன ஏதென்று யாருமே கேட்கவில்லை.. இப்போது இந்தியாவை விட கட்டமைப்புகளுடன் கூடிய திட்டங்களை அவிழ்த்து கொண்டிருக்கிறார்.. உண்மையிலேயே நித்யானந்தா என்ற சாமியார்தான் முதல் ஆண்டி இந்தியன் ஆவார்!

கொரோனா தன்மை அதிகரித்ததால், இந்த 3 மாசமாக அவ்வளவாக சத்தமில்லாமல் இருநத நித்தியானந்தா, நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருக்கிறது.. உள் நாட்டிற்கு ஒரு கரன்சியும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் அச்சடிக்கப்பட்டு தயாராகிவிட்டது.

நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் நல்ல காரியங்களுக்காக செலவிட வங்கி தொடங்கியுள்ளேன். வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளது. கைலாசாவின் ரிசர்வ் வங்கி, சட்டத்தின்படியே தெடங்கப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது. 300 பக்க பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும் வரப்போகிற விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பையும் வெளியிட போவதாக பூடகம் வெளிப்படுத்தி உள்ளார்.

இதில், முதல் விஷயம் இந்த துணிச்சலை நித்யானந்தாவுக்கு தந்தது யார்? எதுக்காக தமிழ்நாட்டில் முதன்முதலில் உலக ஃபேமஸ் ஆனோம் என்று கூட தெரியாமல் இப்போது வரை சிரித்து கொண்டு பேட்டி தந்து கொண்டிருக்கிறார் நித்யானந்தா!

எதுக்காக தலைமறைவாக இருக்கிறோம், எதுக்காக போலீசார் தம்மை தேடி கொண்டிருக்கிறார்கள் என்றுகூட தெரியாமல் புதிய நாட்டை உருவாக்க கிளம்பி போய்விட்டார்! இங்கிருக்கும் போதே அவரை கைது செய்ய முடியாத இந்திய போலீஸ், தலைமறைவாகி விட்டவரை எப்போது கைது செய்து அழைத்து வரும் என்று தெரியாது!

ஒரு நாட்டை தனி மனிதனால் எப்படி உருவாக்க முடியும்? இது சாத்தியமா? தினந்தோறும் வீடியோக்களை போஸ்ட் செய்து வருபவரை, எந்த தொழில்நுட்பம் கொண்டும் கண்டுபிடிக்க முடியவில்லையா? இவர் பாட்டுக்கு ஒரு ராஜாங்கத்தையே நடத்த ஆரம்பித்துள்ளாரே, அப்படியென்றால் இவரை கைது செய்யவே முடியாதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

பக்காவாக பிளான் போட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வருகிறார் நித்யானந்தா.. பொருளாதார கொள்கையை யார் வெளியிட முடியும்? அந்த அளவுக்கு வாடிகனில் நித்யானந்தா செல்வாக்கு உயர்ந்திருக்கிறதா? கரன்சியை ஒரு நாட்டின் அனுமதி இல்லாமல் அச்சடிக்க முடியாது.. பொருளாதார கொள்கையை திட்டக்குழு ஆலோசனை இல்லாமல் வரைப்படுத்த முடியாது.

இவ்வளவும் அசால்டாக நித்தியானந்தா செய்து முடித்ததுடன், அதை பகிரங்கமாகவே வீடியோ போட்டு சொல்கிறார் என்றால், இவர் நிஜமாகவே வேறு நாட்டு பிரஜை ஆகிவிட்டாரா? ஒருவேளை இந்திய பிரஜை இல்லை என்பது உறுதியானால் மத்திய அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.. இல்லையென்றால், நித்யானந்தா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகளின் அடிப்படையில், அதன் உண்மை தன்மைகளையும் கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.

தலைமறைவாக வாழந்து கொண்டிருப்பவர் லட்சோப லட்சம் மக்களை ஒன்று திரட்டி நடுவீதீயில் நாட்டுக்காக போராடிய போராளி ஒன்றும் கிடையாது.. கேவலம் பாலியல் வழக்கில் சிக்கியவர்.. இவரிடம் மேலும் லட்சக்கணக்கானோர் நம்பி ஏமாந்துவிட ஒருபோதும் நாமும், அரசாங்கமும் எந்த விதத்திலும் காரணமாக இருந்துவிடக்கூடாது!