அமெரிக்காவில் ஒரேநாளில் 71,670பேர் பாதிப்பு

0
11

அமெரிக்காவில் அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 71,670பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 997பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, அமெரிக்காவில் 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படையும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக 36இலட்சத்து 16ஆயிரத்து 747பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும் ஒரு இலட்சத்து 40ஆயிரத்து 140பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்த 18இலட்சத்து 30ஆயிரத்து 645பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 16ஆயிரத்து 459பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இதுதவிர, 16இலட்சத்து 45ஆயிரத்து 962பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.