அமைச்சர்களுக்கு திடீர் தொலைபேசி அழைப்பு… கோட்டாபய அதிரடி

0
22

அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட அமைச்சுப் பதவியில் அதிருப்தியடைந்திருந்த அமைச்சர்களுடன் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேசியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை பிரமாண நிகழ்வின் பின்னர் தங்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவி தொடர்பில் சில அமைச்சர்கள் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

தயாசிறி ஜயசேகர, லோகன் ரத்வத்தே, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு ஜனாதிபதி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சின் புரிதலைக் கொடுக்கும் நோக்கத்துடன் செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த அமைச்சுகளால் பல ஆக்கபூர்வமான செயல்பாடுகளைச் செய்ய முடியும் எனவும்அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.