அம்பலமானது ஆலய திருட்டு முயற்சி?

0
16

வடமராட்சியின் பிரபல இந்து ஆலயங்களில் ஒன்றான உடுப்பிட்டி பண்டகை பிள்ளையார் ஆலயத்தில் சிசிரிவி கமராக்களை அணைத்து கொள்ளையிட முற்பட்ட கும்பலொன்று அகப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி பகுதியில் தொடர்ச்சியாக அரங்கேறிவரும் திருட்டுக்களை தடுக்க புலம்பெயர் மக்கள் உதவியுடன் அப்பகுதிகளிலுள்ள பிரபல ஆலயங்களில் சிசிரிவி கமராக்கள் அண்மையில் பொருத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

இவ்வாறு பண்டகை பிள்ளையார் ஆலயத்திலும் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்ற நிலையில் சிசிரிவி கமராக்களை செயலிக்க செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே உடுப்பிட்டியில் போதைபொருள் விற்பனை முகவராக செயற்பட்ட நபரொருவர் அண்மையில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஆலய கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு அம்பலமாகிய பிரதான நபர் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ள போதைபொருள் சந்தேக நபரென கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொள்ளையர்கள் ஆலய பின்வீதியிலுள்ள சிசிரிவி கமராக்களை செயலிழக்க செய்து பின்புறம் ஊடாக ஆலயத்தினுள் செல்ல முற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

ஏற்கனவே சில வருடங்களிற்கு முன்னரும் ஆலயத்தில் பல மில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.