அம்பாறையில் புதிய கொரோனா நோயாளிகள்… ஜனாதிபதியின் கூட்டம் இரத்து

0
32

அம்பாறை தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் மேலும் இரு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதை அடுத்து அங்கு இன்று இடம்பெறவிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கூட்டமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அங்கு ஏற்கனவே ஒரு கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவருடன் நெருக்கமாக இருந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.