அம்மாவின் பெட்ரூம்ல லைட் எரியுதப்பா… முனகல் சத்த வேற கேட்குது… மகன் கதறியதால் நடந்த விபரீதம்

0
338

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தில் வசித்து வந்தவர் நீலாவதி. 42 வயதாகிறது.

கணவர் பெயர் ராமதாஸ். 19 வயதில் ஒரு மகன் இருக்கிறார். ஆனால் 3 வருஷத்துக்கு முன்பே ராமதாஸை பிரிந்து தனியாக ஒரு வீடு எடுத்து மகனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நீலாவதி வீட்டில் சடலமாக கிடந்தார். உடம்பெல்லாம் காயங்கள் கிடந்தன. தகவலறிந்து போலீசார் வந்து பார்த்தபோது, வீட்டில் லைட் மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

அதேவீட்டில் இருந்த மகனைகூட காணோம். இதனால் போலீசாருக்கு சந்தேகம் அதிகமாகவும், அவரை பிடித்து விசாரித்தனர்.

அதற்கு அவர், அம்மாவை கொன்றபோது நான் வீட்டிலேயே இல்லை என்றார். இதையடுத்து சிறிது நேரத்தில் ராமதாஸ் போலீசில் சரண் அடைந்தார்.

மனைவியை கொன்றது தான் தான் என்று வாக்குமூலம் தந்தார். அப்போது அவர் சொன்னதாவது:

நான் மரக்கடை வெச்சிருக்கேன். 3 வருஷத்துக்கு முன்னாடி நீலாவதிக்கு ஒரு இளைஞருடன் தொடர்பு இருந்தது.

அந்த இளைஞர் அதே பகுதியை சேர்ந்தவர்தான். இதை ஒருநாள் நான் நேரில் பார்த்துட்டேன். கண்டிச்சேன். ஆனால் அவ கேக்கல.

அதனாலேயே எங்க குடும்பத்தில் நிறைய முறை சண்டை வந்தது.

அதனால குடும்பம் நடத்த பிடிக்காம, நான் பிரிஞ்சு தனியா போயிட்டேன். என் மேல இல்லாததை எல்லாம் சொல்லி என் மகனையும் அவளே கூட்டிட்டு போய்ட்டாள்.

அம்மா கிட்ட இருந்தாலும், என்கிட்ட மகன் தொடர்பில்தான் இருக்கான். நீலாவதி மேல இருக்கிற கோபத்துல தனியா வாழ்ந்து வந்தாலும், டைவர்ஸ் செய்யல.

நீலாவதி வீட்டுக்கு கீழ் தளத்தில்தான் என் மரக்கடை இருக்கு.

ஆனால், அந்த இளைஞனோட பழகிறது அவ நிறுத்தல. இதை பத்தி அக்கம்பக்கத்தினர் என்கிட்ட புகார் சொல்லிட்டே இருந்தாங்க. சம்பவத்தன்னைக்கு விடிகாலை மரக்கடையை திறக்க போனேன்.

அப்பதான் பெட்ரூமில் லைட் எரிஞ்சிட்டு இருந்தது. முனகல், பேச்சு சத்தம் கேட்டது. ஜன்னல் வழியே எட்டி பார்த்தேன். நீலாவதி அந்த இளைஞருடன் ஜாலியா இருந்தாள்.

“வீட்டில் அம்மாகூட அவன் இருக்கான் அப்பா” என்று என்னிடம் சொல்லி மகன் வேதனைப்பட்டான். நேரிலேயே மகன் அந்த கண்றாவியை பார்த்துவிடவும் நான் கொதித்து போய்விட்டேன்.

அதனால்தான் ஆவேசத்துடன் கத்தியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தேன். வெறி தீரும்வரை நீலாவதியை குத்தி கொன்னுட்டேன். அவனையும் அடிச்சேன். ஆனால் தப்பிச்சு ஓடிட்டான்.

என் மகன் மீது போலீசாருக்கு சந்தேகம் வரவும், நானாக இப்போது சரண் அடைய வந்திருக்கிறேன்” என்றார்.

இதையடுத்து ராமதாசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

இதனிடையே நீலாவதியின் உடல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் போஸ்ட் மார்ட்டம் செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது சம்பந்தமாக தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.