அயர்லாந்து அணிக்கு 172 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

  0
  1
  11 / 100

  உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் 8ஆவது போட்டியில் அயர்லாந்து அணிக்கு 172 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

  இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

  அணிசார்பில் அதிகபடியாக, வனிந்து ஹசரங்க 71 ஓட்டங்களையும், பெத்தும் நிஸங்க 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

  பந்துவீச்சில் அயர்லாந்து அணியின் ஜோசுவா லிட்டில் 23 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

  இந்நிலையில், அயர்லாந்து அணி 172 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.