அயர்லாந்தை பந்தாடியது இலங்கை சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது

    0
    6
    7 / 100

    உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் 8ஆவது போட்டியில் 70 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி “சுப்பர் 12” சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

    போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

    இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

    அணிசார்பில் அதிகபடியாக, வனிந்து ஹசரங்க 71 ஓட்டங்களையும், பெத்தும் நிஸங்க 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

    பந்துவீச்சில் அயர்லாந்து அணியின் ஜோசுவா லிட்டில் 23 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

    இந்நிலையில், 172 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

    அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் ஆண்ட்ரூ பால்பிர்னி 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

    பந்துவீச்சில் இலங்கை அணியின் மகீஷ் தீக்ஷன 17 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

    போட்டியின் ஆட்டநாயகனாக வனிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டார். (துடுப்பாட்டத்தில் – 71 ஓட்டங்கள், பந்து வீச்சு – 12- 1)