அரசியல் தீர்வின் ஆரம்ப புள்ளியாகக்கூட இல்லாத 13 ஆவது திருத்தம்

0
4
14 / 100

சி.அ.யோதிலிங்கம்

இந்திய வெளியுறவுச் செயலர் ஷிங்ரிலாவின் வருகையின் பின்னர் 13ஆவதுதிருத்தம் மீளவும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியிருக்கின்றது. தமிழ்க்கட்சிகள்13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றும்படி ஒருங்கிணைந்து அழுத்தம்கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்திய வெளியுறவுச் செயலர் விடுத்துச்சென்றமையே இதற்குப் பிரதான காரணமாகும்.

13ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக கொள்ள முடியாது ஆனால்ஆரம்பப் புள்ளியாகக் கொள்ளலாம் என்பது சிலரின் வாதம்.

ஒற்றையாட்சிக்குட்பட்ட ஒரு பொறிமுறை ஆரம்பப்புள்ளியாகக் கூட இருக்க மாட்டாதுஎன்பது மறு தரப்பின் வாதம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆரம்பப்புள்ளியாகக் கொள்ளலாம் என்றகருத்தையே கொண்டுள்ளது. விக்கினேஸ்வரனின் கட்சியிடமும் அந்தக் கருத்தேஇருப்பதுபோன்றுள்ளது. எனினும் அவரது கூட்டணியிலுள்ள சிவாஜிலிங்கம் 13ஐஆரம்பப்புள்ளியாகக் கூட இருக்கத் தகுதியற்றது என்றே கூறி வருகின்றார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பப் புள்ளியாகக் கூட இருக்கத் தகுதியற்றதுஎனக்கூறி மொத்தமாகவே நிராகரிக்கின்றது.

பொதுமக்கள் மத்தியிலும் இது தொடர்பாக இரண்டு பக்க ஆதரவுக் கருத்துக்களும்உள்ளன. சாதாரண மக்கள் அனுபவத்தின் அடிப்படையிலேயே பொதுமுடிவுக்குவருபவர்களாக இருப்பதனால் ஆரம்பப்புள்ளியாகக் கூட இருக்க மாட்டாது என்பதேபெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.

வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக பதவி வகித்த வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணசபை, பிள்ளையான் முதலமைச்சராக பதவி வகித்த கிழக்கு மாகாணசபை, விக்கினேஸ்வரனின் வடக்கு மாகாணசபை என்பவற்றின் அனுபவத்தைக் கொண்டே இம்முடிவுக்கு வந்துள்ளனர் எனினும் கணிசமானோரிடம் ஆரம்பப்புள்ளியாகக் கொண்டு முன்னேறலாம் என்ற கருத்தும் உள்ளது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-17#page-2