அலுவலகங்களில் பெண்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள்?

0
18

ஒரு பெண்ணை பற்றி புறங்கூறுவது நிச்சயமாக இன்னொரு பெண்ணாக தான் இருக்கும். ஒரு காலமும் ஆண்கள் ஒரு பெண்ணை பற்றி இன்னொரு பெண்ணிடமோ இல்லை தன் நண்பர்களிடமோ குறை கூற மாட்டார்கள். தமக்கு பிடிக்காத பெண்ணாக இருந்தாலும் அதை தமக்குள்ளேயே வைத்து கொண்டு அவர்களுடன் தோழமையாக பழகுவதை குறைத்து கொள்வார்களே தவிர அவளை பற்றி இன்னொருவரிடம் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் பெண்களுக்கு இன்னொரு பெண்ணை பற்றி ஏதாவது பேசவில்லை என்றால் அன்று முழுதும் தூங்க மாட்டார்கள்.

அதுவும் வீட்டில் இருக்கும் பெண்கள்தான் அடுத்த வீட்டு பெண்ணை பற்றி வேலை இல்லாமல் வெட்டி பேச்சு பேசுவார்கள் என்று முன்னர் எல்லாம் சொல்வார்கள். ஆனால் இப்பெல்லாம் அது மாறி நடக்கிறது.. அலுவலகத்திற்கு போகும் பெண்களில் சிலர் ஒவ்வொரு பெண்களை பற்றியும் மாறி மாறி வெவ்வேறு பெண்களிடம் பேசாவிட்டால் அவர்களுக்கு தூக்கமே வராதாம்.

அவள் ஏன் இப்பபடி ட்ரெஸ் பண்ணிறாள்? அவள் ஏன் பெரிதாக யாரிடமும் பேசுவதில்லை? அவள் யாரை காதலிக்கிறாள் என்று யாராவது ஒரு பெண்ணை போட்டு சக்கரை கரைக்காவிட்டால் சில பெண்களின் தூக்கம் பறி போய்விடுமாம்.

இதனால்தான் சில பெண்கள் அலுவலகங்களில் அவதூறான பெயர் வாங்குவதோடு சக ஊழியர்களால் நன்மதிப்புக்கு உள்ளடக்கப்படாதவர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் இப்படி ஏன் பேசுகின்றார்கள் என்ற பலருடன் பேசிப்பார்த்தபோது பலரும் சொன்ன பதில்- சில பெண்களுக்கு தம்மை விட வேலையில் வேகமாகவும் விவேகமாகவும் அல்லது தம்மோடு ஏட்டி போட்டியாக நிற்பவர்கள் மேல் ஒரு கவனக்குவிவு ஏற்படுகிறதாம்.

அதனை பொறாமையாக விஸ்தரிப்பாதால் இப்படியெல்லாம் பேசுவார்களாம். ஆனால் சிறிது காலத்தில் சிலவேளை அந்த இரண்டு பேரும் சக தோழிகள் ஆகும் வாய்ப்புக்கள் கூட உள்ளதாம். எனவே பெண்களுக்கு பெண்கள் புறங்கூறுவதிலும் பார்க்க ஒருவரை ஒருவர் முன்னேற்றுவதற்காக ஊக்கப்படுத்துவது தான் பெண்கள் வர்க்க்தில் முதல் பலமாகும் என்பதை உணர்வோம்.