ஆடு நனைகிறதென ஓநாய் அழுத கதையா இது? (வீடியோ இணைப்பு)

0
117

இந்த வீடியோவை பார்க்கவும் இதில்

1) சுமந்திரன் வாக்கெண்ணும் நிலையத்திற்கு ஏன் வந்தார் என்பதற்கு சிவாஜிலிங்கமே விளக்கம் கொடுக்கிறார்.

2) யாழ்ப்பாணம் வாக்கெண்ணும் நிலையத்தில் எந்த மோசடியும் இடம்பெறவில்லையாம் என்றும் சொல்கிறார்.

3)விருப்பு வாக்கினை அறிவிக்க தாமதம் ஆனமைக்கு காரணம் விருப்பு வாக்குகள் சுமந்திரன் கோரியதால் திருப்பி எண்ணப்பட்டதென்று கிளப்பி விடப்பட்ட வதந்தியால் அல்ல கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து விருப்பு வாக்கு முடிவுகள் வர தாமதம் ஆனமைதான் காரணம் என்று சிவாஜிலிங்கமே சொல்கிறார்.

4) சிவாஜிலிங்கம் புலிகள் இருந்த காலத்தில் நடந்த தேர்தலில் முகமாலையில் வைத்து கிளிநொச்சி மாவட்ட வாக்குகளில் விரும்பியோருக்கு விருப்பு வாக்கு போட்டார்கள் அதிகாரிகள் தனக்கும் 5 ஆயிரம் போட்டார்கள் என்று ஒரு வாக்குமூலம் கொடுக்கிறார். அதேபோல் இப்போதும் செய்துவிட்டார்கள் என்கிறார் (குறிப்பு:- இவர்கள்தான் அந்நேரத்தில் சிறீதரன் 75 வாக்கு போட்டேன் என்று கூறியதைவைத்து அவரை கள்ளன் என்றார்கள் இன்று இவரே சொல்கிறார் தனக்கும் 5 ஆயிரம் விருப்பு வாக்குகள் போட்டார்கள் என்று)

5) சிவாஜிலிங்கம் இன்னும் பழைய கால நினைப்பில் இருக்கிறார் என்று நினைக்கிறேன் அதனால்தான் கிளிநொச்சியில் இருந்து வந்த முடிவில் இடையில் வைத்து விருப்பு வாக்கை சுமந்திரனுக்கு போட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார் போலும்.

இதில் பெரும் வேடிக்கை தென்னிலங்கையின் நேரடி முகவர் அங்கஜன் ராமநாதன் இந்த விடயத்தில் யாரோ அழுத்தம் கொடுத்து முடிவை மாற்றிவிட்டார்கள் என்று சொல்வதுதான். முன்னாள் அரை அமைச்சர் அங்கஜன் ராமநாதானுக்கு தெரியாமல் தென்னிலங்கையில் இருந்து யார் அழுத்தம் கொடுத்திருப்பார்கள். மகிந்த கோத்தா இவரின் அணி அவர்கள் அழுத்தம் கொடுப்பதாக இருந்தால் அங்கஜன் ஊடாகத்தான் அழுத்தம் கொடுத்திருப்பார்கள். அப்படியானால் அவர் கொடுக்கவில்லை சிலவேளை ரணில் அழுத்தம் கொடுத்திருப்பாரோ? 😀

இவர்களின் மாறுபட்ட கதைகளே இந்த விடயத்தில் எந்த உண்மையும் இல்லை இது வேண்டுமென்றே சுமந்திரன் மீது கட்டிவிடப்பட்ட அவதூறு என்பதற்கு சாட்சி ஆகிறது.

விருப்பு வாக்கு விடயத்தில் உண்மையில் நடந்தது என்ன?

நடந்தது இதுதான்….

#கிளிநொச்சி மாவட்டத்திலே கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகள் சுமார் 35ஆயிரம் அதில் #சிறீதரனுக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் 23 ஆயிரம் #சுமந்திரனுக்கு கிடைத்த வாக்குகள் 4900 கிளிநொச்சி விருப்பு வாக்குகள் வருவதற்கு முன்பு சசிகலா முன்னிலையில் இருந்தார் அப்போது சுமந்திரன் நான்காவது இடத்தில் இருந்தார். கிளிநொச்சியில் சித்தார்த்தனுக்கோ சசிகலாவுக்கோ அதிக விருப்பு வாக்குகள் கிடைக்கவில்லை. யாழ்மாவட்டத்திலே அவருக்கு கிடைத்த வாக்குகளோடு கிளிநொச்சி விருப்பு வாக்கும் இணைய தானாகவே அவர் இரண்டாம் இடத்திற்கும் சிறீதரன் முதலாம் இடத்திற்கும் வந்துவிட்டனர். இது ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கே புரியக்கூடியது அரசியலில் இறங்கியவர்களுக்கு ஏன் புரியவில்லை? அவர்களுக்கும் புரியும் புரியாத மாதிரி நடித்து மக்களை மடையர்கள் ஆக்குகின்றனர்.

பல சந்தேகங்களுக்கு விடை இந்த வீடியோவிலே உண்டு.

இவர்களைப்பொருத்தவரை சசிகலா ரவிராஜ் ஒரு கருவி அவரை வைத்து சுமந்திரனை பலிதீர்க்க முனைகின்றனர் அவ்வளவே…உண்மையில் இப்போதுதான் எனக்கு சசிகலா ரவிராஜ் மீது அனுதாபம் ஏற்படுகிறது. அவரை தூண்டிவிட்டு அதில் குளிர்காய இத்தனை பேரா என்று நினைக்கிறேன். சுமந்திரனுக்கு எதிராக செயற்படா விட்டால் அவருக்கு எவ்வகையான அச்சுறுத்தல் ஏற்படும் என்று நினைத்துப்பார்க்கிறேன். ஒரு அபலைப்பெண்ணை வைத்து தம் அரசியலை செய்ய நினைக்கும் இந்த அயோக்கியர்களை காறித்துப்ப வேண்டும்.

Posted by சுப்ரமணிய பிரபா on Saturday, August 8, 2020

Posted by சுப்ரமணிய பிரபா on Saturday, August 8, 2020