ஆபத்து வலயமாக மாறி வரும் நகரம்

0
15

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரத்தினபுரி நகரம் அதிக ஆபத்தான நிலைமைக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரத்தினபுரி குடுகல்வத்தை பிரதேசம் தற்காலிகமாக மூடுவதற்கு நேற்றைய தினம் கொரொனா தடுப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.

அத்துடன் நகரத்தின் பிரதான பாடசாலைகள் மூன்றையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குடுகல்வத்தை பிரதேசத்ததில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட 20 கொரோனா பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மாவட்டத்தினுள் இதுவரையில் 572 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.