இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது!

0
9

இங்கிலாந்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் ஜூலை 24ஆம் திகதி முதல், மக்கள் கடைக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜூன் மாத நடுப்பகுதியில் பொதுப் போக்குவரத்தில் கொண்டுவரப்பட்ட விதிகளின்படி, கடைகளில் முகக்கவசம் அணியத் தவறியவர்களுக்கு 100 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிப்பார் என நம்பப்படுகின்றது.

‘ஒரு மூடப்பட்ட இடத்தில் முகக்கவசம் அணிவது தனிநபர்களையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க உதவுகிறது என்பதற்கு அதிக சான்றுகள் உள்ளன’ என்று பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் தொடர்பான அரசாங்க வழிகாட்டுதல் சமீபத்திய நாட்களில் முரண்பாடாக உள்ளது. அமைச்சரவை அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவ் (Cabinet Office minister Michael Gove) ஞாயிற்றுக்கிழமை, கடைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படக்கூடாது என்று கூறினார்.

தற்போது, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் பொதுப் போக்குவரத்தில் அவை கட்டாயமாக உள்ளன. ஜூலை 27ஆம் திகதி முதல் வேல்ஸ் அரசாங்கமும் இதே நடவடிக்கையை அமுல்படுத்த உள்ளது

ஜூன் 15ஆம் திகதி முதல் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.