இணையத்தில் வைரலாகும் தோனி, ரெய்னா மகள்கள் புகைப்படம்

  0
  26

  முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கே துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங்களது ஓய்வை நேற்று அறிவித்துள்ளனர். இந்நிலையில், அவர்களின் பெண் குழந்தைகள், தங்களது அப்பாக்கள் ரிடையர்ட் ஆனதாக கூறும்படியான புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர். இரு பெண் குழந்தைகளும் மைதானத்தை பார்த்தபடியிருக்கும் அந்த புகைப்படத்தில் உடைந்த இதயத்தையும் பதிவிட்டுள்ளனர் ரசிகர்கள்.

  முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி -சாக்ஷி தோனியின் காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக அவர்களுடைய பெண் குழந்தை ஜிவா உள்ளார். இவர் செய்யும் குறும்புத்தனங்களை அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் சாக்ஷி போஸ்ட் செய்து வருகிறார். இதனால் தோனியை போலவே இந்த வயதிலேயே இவர் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகி உள்ளார்.

  இதேபோலவே சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் பிரியங்கா தம்பதியின் செல்ல மகளான கிரேசியாவும் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகவே வலம் வருகிறார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள போதிலும் கிரேசியாவிற்கு ரசிகர்களிடம் அதிகமாகவே கிரேஸ் உள்ளது.

  எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவர்கள் ஓய்விற்கான அதிர்ச்சி அடுத்ததாக வாழ்த்துக்கள் உள்ளிட்டவற்றை பரிசளித்த ரசிகர்களின் கவனம் அவர்களது மகள்களின்பால் திரும்பியுள்ளது.

  இரு குழந்தைகளும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர் ரசிகர்கள். ஜிவாவும் கிரேசியாவும் மைதானத்தை பார்த்தபடி நிற்கும் புகைப்படத்தில், என்னுடைய அப்பா ரிடையர்ட் ஆயிட்டாரு… ஆமா என்னோட அப்பாவும்தான் என்று கூறும்படியான கேப்ஷனையும் வெளியிட்டு அழகு பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.