இந்தியளவில் விஜய் நம்பர் 1… டுவிட்டரில் புதிய சாதனை…

0
20

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு தமிழகம் தண்டிலும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.

அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக நடித்துள்ளதால், இவர்கள் இருவரையும் திரையில் காண அவளோடு உள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜய் சில மாதங்களுக்கு முன்பு படபிடிப்பு தளத்தில் ஒரு செல்பி எடுத்தார்.

அந்த செல்பியை விஜய் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார், அந்த செல்பி தற்போது வரை 1.3 லட்சம் பேர் ரீடுவிட் செய்துள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவில் ஒரு நடிகரின் டுவிட்டிற்கு அதிக ரீடுவிட் வந்தது இதுவே முதன் முறை, மேலும் சில 1 லட்சம் ரீடுவிட்ஸை விஜய் பெற்றுள்ளார்.

இதன் மூலம் டுவிட்டரில் அதிக ரீடுவிட் செய்த சாதனையில் இந்தியளவில் விஜய் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.