இந்தியாவில் ஐபோன் நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்… ஒரே நாளில் 437 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான சொத்துகள் இழப்பு…

  0
  56

  ஆப்பிள் நிறுவனமானது தனது ஐபோன்களை அசெம்பிள் செய்யும் பணியினை Wistron எனும் நிறுவனத்திடம் வழங்கியுள்ளது.

  தாய்வானைச் சேர்ந்த இந்நிறுவனமாது இந்தியாவிலும் தனது கிளையினை கொண்டுள்ளது.

  அதாவது பெங்களூரில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ள கோலார் எனுமிடத்தில் காணப்படுகின்றது.

  இக் கிளையிலும் ஐபோன்கள் அசெம்பிள் செய்யப்பட்டு வருகின்றன.

  இங்கு பணியாற்றுபவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

  சம்பளப்பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தின்போது ஆயிரக்கணக்கான ஐபோன்கள் திருட்டுப் போயுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

  தமக்கு 3 மாதச் சம்பளம் வழங்கப்படாமையையிட்டு இவ்வாறு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளை 6 வாகனங்களையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.

  அத்துடன் இந்திய மதிப்பில் சுமார் 437 கோடி ரூபாய்கள் பெறுமதியான சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.