இந்திய இளைஞர் உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள் மீட்பு!

0
7

இந்திய இளைஞர் உட்பட மூன்று பேர் வெவ்வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றைய தினம் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் இவர்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

வெலிகந்த பகுதியில் 49 வயதுடைய நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேபோல் நேற்று மாலை மின்னேரிய பகுதியிலும் உயிரிழந்த நிலையில் 59 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் 25 வயதுடைய இந்திய இளையஞர் ஒருவரும் வீடொன்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.