இந்தோனேசிய பகுதியில் நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

0
40

இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை 6.9 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் கடுமையாக அதிர்ந்துள்ள போதும் இதன்போதான சேத விவரம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.