இந்த பெண்ணை பார்த்தால் உடனடியாக தெரியப்படுத்துமாறு அறிவிப்பு

0
4

வவுனியா- புதிய கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 4பிள்ளைகளின் தாயை காணவில்லையென வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவனே இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “கடந்த சில நாட்களுக்கு முன்னர், கிரிதரன் வக்சலா (வயது 31) என்ற குறித்த பெண் தனது கடைசி மகளுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால், குறித்த பெண் அன்றைய தினம் மாலையாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அப்பெண்ணின் கணவர் அப்பகுதி முழுவதும் சென்று தேடி பார்த்துள்ளார். எனினும் அவர் கிடைக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதாவது காணாமல் போன குறித்த பெண்ணின் இடது பக்க கண்ணத்தில் கருப்பு நிறத்தில் மச்சம் காணப்படுவதாகவும் அவர் இறுதியாக சென்ற சமயத்தில் நீலம் மற்றும் வெள்ளை நிறத்திலான ஆடை அணிந்திருந்ததாகவும் முறைப்பாட்டில் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாயாரை காணாத ஏனைய மூன்று பிள்ளைகளும் உணவினைக் கூட உட்கொள்ளாமல் சோகத்தில் உள்ளனர். எனவே யாராவது குறித்த பெண்ணை கண்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தெரிவியுங்கள் அல்லது கிரிதரன் – 0775255861, மோகன் – 0766327556, முகிசன் – 0778899787 ஆகியோருக்கு தொடர்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு அவரது குடும்பத்தினர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.