இந்த ராசியினருக்கு இந்த வாரம் முழுவதும் சனி உச்சத்தில்தான்… மிகவும் அவதானம் தேவை

0
265

செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷம் ராசியில் ஆட்சி பெற்ற செவ்வாய், மிதுனம் ராசியில் ராகு, கடகம் ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன், கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்ற புதன், தனுசு ராசியில் ஆட்சி பெற்ற குரு, கேது, மகரம் ராசியில் ஆட்சி பெற்ற சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சூரியன் இந்த வாரம் சிம்மம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பயணம் செய்கிறார்.

சந்திரன் இந்த வாரம் மிதுனம், கடகம், சிம்மம் ராசிகளில் பயணம் செய்கிறார்.

இந்த வாரம் விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் பயணம் இந்த வாரம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் தொடங்குகிறது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குருவின் பார்வை இருப்பதால் மனம் சந்தோஷம் அடையும் சம்பவங்கள் நடைபெறும்.

விரைய செலவுகள் ஏற்படும் என்பதால் செலவுகளை கட்டுப்படுத்தவும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் வரும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நல்ல செய்தி தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.

தேவையில்லாமல் மனதை போட்டு குழப்பிக்காதீங்க. வாயை கொடுத்து வம்புல மாட்டிக்காதீங்க. உணர்வுபூர்வமாக முடிவு எடுக்காதீங்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு எடுங்க. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லத்தரசிகள் இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வெளியூர் போகும் பயணம் வெற்றிகரமாக முடியும் உணவு விசயத்தில் கவனமாக இருங்க. நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறுகள் வரலாம் எச்சரிக்கை. இந்த வாரம் குரு அருளால் தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபடுவது நன்மை செய்யும்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் இரண்டாம் இடத்தில் ராகு மூன்றாம் வீட்டில் சுக்கிரன் நான்காம் வீட்டில் சூரியன் ஐந்தாம் வீட்டில் புதன், எட்டாம் வீட்டில் குரு கேது 12ஆம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் நிதானமாக அடி எடுத்து வைப்பது நல்லது. எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிக்க வேண்டாம். குடும்ப விசயங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வேலைப்பளு அதிகமாகும். சமாளித்து விடுவீர்கள். யாரை நம்பியும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். கணவன் மனைவி உறவில் சில ஊடல்கள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க.

பேச்சில் கவனம் தேவை விட்டுக்கொடுத்து போவது நல்லது. வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

பயணங்களில் பாதுகாப்பு தேவை. எந்த காரியமாக இருந்தாலும் யோசித்து முடிவு பண்ணுங்க. வீட்டில் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். வேலை செய்பவர்களுக்கு சின்னச் சின்ன பிரச்சினை வரலாம் எச்சரிக்கையாக இருங்க.

இந்த வாரம் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் நன்மைகளே நடைபெறும். மகாளய அமாவாசை வருவதால் முன்னோர்களுக்கு படையல் போட்டு வணங்குங்கள். நிச்சயம் நன்மைகள் நடைபெறும்.சிவ ஆலயம் சென்று அம்மனை தரிசனம் செய்து வருவது நல்லது.

மிதுனம்
புத்திசாலித்தனமான புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசியில் ராகு, இரண்டாம் வீட்டில் புதன் மூன்றாம் வீட்டில் சூரியன், நான்காம் வீட்டில் புதன், ஏழாம் வீட்டில் குரு கேது, அஷ்டம ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

தொழிலில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். உங்க தைரியம் தன்னம்பிக்கை கூடும். எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி தேடி வரும். வருமானம் பல வழிகளில் இருந்து வரும். இடமாற்றம் ஏற்படும். விஐபிக்கள் அறிமுகம் கிடைக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். புதிய வாய்ப்புகள் வருவதை பயன்படுத்துங்கள். உங்களின் மதிப்பு மரியாதை கூடும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த வாரம் சுப காரியம் செய்ய முயற்சி செய்யலாம்.

வியாபாரத்தில் லாபம் வரும் புதிய முதலீடுகளுக்கு நல்ல லாபம் வரும் பங்குச்சந்தை முதலீடுகளால் வருமானம் இரட்டிப்பு ஆகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக அமைந்துள்ளது. மகான்களின் தரிசனம் நன்மையை தரும்.

கடகம்
மனோகாரகன் சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே, உங்க ராசியில் சுக்கிரன், ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சூரியன் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் புதன், ஆறாம் வீட்டில் குரு, கேது, ஏழாம் வீட்டில் சனி, பத்தாம் வீட்டில் செவ்வாய், விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சூரியன், சுக்கிரன், குரு சஞ்சாரம்

உற்சாகத்தை கொடுக்கும். வருமானம் எவ்வளவு வந்தாலும் செலவு அதிகமாகிறதே என்று நினைக்கறீர்களா? செலவுகள் கட்டுப்படும் காலம் வரும்.

வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பயணங்களால் நன்மைகள் நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்துக்கொள்வது நல்லது. பணம் பொருட்களை கவனமாக வைத்துக்கொள்வது நல்லது.

வீண் செலவுகள் செய்து அதிக கடனில் சிக்கிக்கொள்ளாதீங்க. இல்லத்தரசிகள் உணவோ, பொருளோ கவனமாக இருங்க. பாதுகாப்பு விசயத்தில் கவனமாக இருங்க.

வியாபாரிகளுக்கு வெற்றிகள் தேடி வரும் லாபம் கிடைக்கும். பொறுமையும் நிதானமும் கவனமும் தேவைப்படும் வாரம் இது. சிவ வழிபாடு நன்மையை தரும்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசியில் சூரியன் இரண்டாம் வீட்டில் புதன், ஐந்தாம் வீட்டில் குரு, கேது, ஆறாம் வீட்டில் சனி, ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், லாப ஸ்தானத்தில் ராகு, விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக அமைந்துள்ளது.

முன்னேற்றத்தை தரக்கூடிய வாரமாக அமைந்துள்ளது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாக்கில் கவனம் தேவை வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். குருவின் பார்வையால் நன்மைகள் நடைபெறும்.

பிரச்சினைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்பவர்களுக்கு புதிய புரமோசன் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் செலுத்த வேண்டியது அவசியம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வருமானம் உயரும். பொன் நகை சேரும்.

உணர்ச்சிவசப்படாமல் எதையும் நிதானமாக அணுகுவது நன்மையை தரும். இந்த வாரம் ரொம்ப சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குரு பார்வையால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கடன் உதவிகள் கிடைக்கும். தொழிலில் செய்யும் முதலீடுகளுக்கு லாபம் கொடுக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடுவது நன்மையை அதிகரிக்கும்.

கன்னி
அறிவின் நாயகன் புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்க ராசிநாதன் உங்க ராசிக்கு வந்து ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

நான்காம் வீட்டில் குரு கேது, ஐந்தாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் செவ்வாய் பத்தாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. நினைத்தது நிறைவேறும். வருமான தடை நீங்கும் பணவரவு அதிகரிக்கும். கொடுத்த

வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பண விவகாரங்களில் கவனம் தேவை. சிக்கனமாக செலவு செய்வது நல்லது.

சொத்துப்பிரச்சினையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வீண் விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். சுப காரிய தடைகள் நீங்கும். சுப காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது அக்கறை காட்டுங்கள்.

துலாம்
காதல் நாயகன் சுக்கிரபகவானை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு மூன்றாம் வீட்டில் குரு, கேது, நான்காம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் ராகு பத்தாம் வீட்டில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன், விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களின் கவுரவம் உயரும். தொழிலில் உயர்வும் லாபமும்

வரும். இதுநாள்வரை முடங்கிக் கிடந்த உங்களுக்கு இந்த வாரம் வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.

சொத்து சேர்க்கை ஏற்படும். விஐபிக்கள் அறிமுகம் நன்மை வரும். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பேசுவது நல்லது. பெண்கள் உயரதிகாரிகள், உறவினர்களிடம் பேச்சில் கவனம் தேவை. சிலருக்கு திடீர் திருமண யோகம் வரும் சுப காரிய பேச்சுக்களை தொடங்கலாம். வியாபாரத்தில் லாபம்

வரும். நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுத்த கடன்கள் வசூலாகும். சிலருக்கு குடும்பத்தில் சில சிக்கல்கள் வீண் குழப்பங்கள் வரலாம் பேச்சில் கவனமாக இருங்க. கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்க. விட்டுக்கொடுத்து போங்க. பெருமாள் வழிபாடு நன்மை செய்யும்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் குரு, கேது, மூன்றாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் செவ்வாய், எட்டில் ராகு, ஒன்பதில் சுக்கிரன், பத்தில் சூரியன், லாப ஸ்தானத்தில் புதன், என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. வார துவக்கத்தில் சந்திரன் சாதகமாக இல்லை.

மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. உங்களுடைய பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். பணவரவு அபரிமிதமாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும்.

உங்களுடைய வேலை தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் நீங்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை கூடும். வேலை செய்யும் இடத்தில் உங்க வேலைக்கு அங்கீகாரம் கொடுக்கும்.

உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறவில் குதூகலம் ஏற்படும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வாக்கு ஸ்தானத்தில் உள்ள குரு வக்ர நிவர்த்தி அடைவதால் பண வரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் லாபம் நிறைந்ததாக இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. குடும்ப விவகாரங்களை வெளியாட்கள் யாரிடமும் வெளிப்படையாக பேசாதீங்க. அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும் கவனம் தேவை.

தனுசு
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்க ராசியில் குரு கேது, இரண்டாம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் சூரியன் பத்தாம் வீட்டில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

செப்டம்பர் 13ஆம் தேதி பகல் 10.36 மணி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி பிற்பகல் 2.25 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.

இதுநாள் வரை வக்ரமடைந்து பின்னோக்கி சென்ற குரு வக்ர நிவர்த்தி அடைந்து நல்ல பலத்தோடு அமர்வது உங்களுக்கு சிறப்பு. நல்ல காரியம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். உங்களுடைய முயற்சிகள் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வேலை தொடர்பாக நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தொழில் தொடங்கலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது.

உங்களின் திறமை வெளிப்படும். பேச்சில் கவனம் தேவை. பெண்கள் யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம் நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.

வீட்டிலோ வெளியிடங்களிலோ கோபத்தோடும் வேகத்தோடும் பேச வேண்டாம். பணம் நகைகளை பத்திரமாக வைத்திருங்கள். பணவரவு அதிகம் வரும் கூடவே சுப விரைய செலவுகளும் வரும் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் தேவைப்படும்.

மகரம்
சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசியில் ராசி நாதன் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருக்க நான்காம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார்.

ஆறில் ராகு, ஏழாம் வீட்டில் சுக்கிரன், எட்டில் சூரியன், ஒன்பதாம் வீட்டில் புதன், விரைய ஸ்தானத்தில் குரு கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. செப்டம்பர் 15ஆம் தேதி பிற்பகல் 2.25 மணி முதல் செப்டம்பர்17ஆம் தேதி பிற்பகல் 03.07 மணிவரை சந்திராஷ்டமம்

உள்ளதால் கவனமாக இருக்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும். திடீர் அதிர்ஷ்டம் வந்து திக்குமுக்காட வைக்கும். உங்களுக்கு அபரிமிதமான யோகம் கிடைக்கும்.

கடன் பிரச்சினை நீங்கும். வீடு சொத்து வாங்குவது தொடர்பாக சுப விரைய செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சிலருக்கு சம்பள உயர்வு தேடி வரும். கிடைத்த வேலையை உற்சாகமாக செய்யுங்கள். இளைஞர்கள், கன்னிப்பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.

சிலரது வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். வருமானம் அதிகரிக்கும்.மாணவர்கள் கல்வியில் பிடித்த துறையை தேர்வு செய்து படிப்பீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் யோகம் கைகூடி வருகிறது.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்கு இந்த வாரம் 7ஆம் வீட்டில் சூரியன், எட்டில் புதன் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் குரு கேது, விரைய ஸ்தானத்தில் சனி, என கிரகங்கள் அமர்ந்து உள்ளன.

தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் திடீர் இடமாற்றம் வரும்.

பண வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். பயணங்களில் அலைச்சல் வரும் கவனம் தேவை. மறைந்த புதன் சில வித்தைகளை கற்றுக்கொடுப்பார்.

மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். இந்த மாதம் சொத்துக்களை வாங்க வேண்டாம் ஒத்திப்போடுங்க. சுக்கிரன் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் திடீர் சங்கடங்கள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. நான்கில் ராகு, பத்தில் கேது என சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம். வேலையில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. வியாபாரம் செய்பவர்கள் லாபத்தை மட்டும் கவனமாக

வைத்துக்கொள்ளுங்கள். திருமண முயற்சிகளில் தடை வந்து பின்னர் வெற்றிகரமாக நடைபெறும்.

மீனம்
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்கு இரண்டில் செவ்வாய், நான்கில் ராகு, ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஆறில் சூரியன், ஏழாம் வீட்டில் புதன், பத்தில் குரு,கேது, லாப ஸ்தானத்தில் சனிபகவான் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.

உங்க வாக்கு பலமடையும். நீங்க சொன்னதை செய்து காட்டக்கூடிய தைரியம் அதிகரிக்கும். வேலையில் புது உற்சாகம் பிறக்கும்.

வேலை செய்யும் இடத்தில் திறமைகள் வெளிப்படும் சுப பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் நல்ல விசயங்கள் நடக்கும்.

பிள்ளைகளின் விருப்பங்கள், தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். நல்ல வரன் அமையும். படிப்பு தொடர்பாக மாணவர்கள் திட்டமிடுவது வெற்றிகரமாக முடியும்.

படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த வாரம் வேலை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு தேடி வரும்.