இந்த வருட யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது

0
10

கொரோனா வைரஸ் பல உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் வேளையில் தடைப்பட்டிருந்த போட்டிகள் அனைத்து தற்போது தொடங்கியுள்ளது.

அதில் இந்த வருட யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவேளையில் கடந்த வருடம் யு.எஸ். ஓபன் போட்டியை வென்ற பியான்கா ஆன்ட்ரிஸ்கு, இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளார்.

இவர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்டி, ஜாம்பவான் ரபேல் நடால் ஆகியோர் விலகியிருந்தனர். தற்போது இந்த பட்டியலில் பியான்கா ஆன்ட்ரெஸ்குவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.