இந்த வார ராசி பலன்கள் – ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை

0
141

மேஷம்

இந்த வாரம் உங்க ராசியில் ராசிநாதன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். ஐந்தாம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் புதனோடு சேர்ந்து ஆட்சி பெற்று அமர்வதால் அற்புதமாக இருக்கப்போகிறது.

நினைத்த காரியம் நிறைவேறும். ஒன்பதாம் வீட்டில் குரு ஆட்சிப்பெற்று கேது உடன் அமர்ந்து உங்க ராசியைப் பார்வையிடுவது சிறப்பு. இந்த வாரம் 1ஆம் வீடு 5ஆம் வீடு 9ஆம் வீடு அற்புதமாக அமைந்துள்ளது. முக்கிய அரச கிரகங்கள் ஆட்சி பெற்றுள்ளன. வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

பணம் நன்றாக இருக்கும். வக்ரமடைந்த குரு ஒன்பதாம் வீட்டில் கேது உடன் அமர்ந்து குருவின் பார்வை செவ்வாய், சூரியன் மீது விழுவது அற்புதமாகும். நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக சில நன்மைகள் நடைபெறும். இதுநாள் வரை இழுபறியாக தடைபட்டு வந்த காரியங்கள் கைகூடி வரும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும்.

நல்ல செய்தி தேடி வரும். குருவின் பார்வையால் சாதகம் நடைபெறும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். புத்திர பாக்கியம் தேடி வரும் என்றாலும் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்.

உங்களுடைய புது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் முதலீடுகளை தைரியமாக செய்யலாம்.குடும்பத்தில் உங்களுக்கு நல்ல விசயங்கள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே பேச்சுவார்த்தையில் நிதானம் தேவை. திருமண முயற்சிகள் கொஞ்சம் ஒத்திப்போடலாம்.

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு நிறைய பணவரவு வரும், செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை விசயமாக நிறைய திட்டமிடலாம். சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிலும் நான்காம் வீட்டிலும் பயணிக்கிறார். புதிய வேலைக்காக முயற்சி செய்யலாம்.

சூரியன் சுக ஸ்தானாதிபதி சுகஸ்தானமான நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது ரொம்ப நல்லது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் சொத்து வீடு வண்டி வாகனம் வாங்கலாம்.

திருமணம் சுப காரிய முயற்சிக்கான பேச்சுவார்த்தை நன்றாக இருக்கும். செவ்வாய் விரைய ஸ்தான அதிபதி. அவர் 12ஆம் வீட்டில் அமர்வது விபரீத ராஜயோகம். ராகுவினால் குடும்பத்தில் சில குழப்பங்கள் கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது பேச்சில் கவனமாக இருங்க.

எதையும் நிதானமாக ஹேண்டில் பண்ணுங்க பிரச்சினைகள் எளிதில் திடுரு மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் நன்றாக இருக்கிறது. பிடித்த படிப்பை பிடித்த கல்லூரியில் சேர ஆன்லைனில் அப்ளை செய்யலாம். படிக்க இடம் கிடைக்கும்.

மிதுனம்

இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் சூரியனும் புதனும் மூன்றாம் வீட்டிற்கு மாறுகின்றனர். நீங்க செய்யும் வேலையில் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பத்தாம் வீட்டில் இருந்த செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு வருவது செய்யும் தொழிலில் லாபத்தை அதிகரிக்கும்.

குடும்பத்தில் என்னதால் பிரச்சினை இருந்தாலும் குரு பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் நிறைய நல்லது நடக்கும், தொழில் வியாபாரத்தில் உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்பவர்கள் அந்த வேலையில கவனமாக இருங்க.

புதிய வேலை மாறவோ, பிசினஸ் புதிதாக ஆரம்பிக்கவோ சரியான நேரமில்லை. திருமணம் சுப காரிய முயற்சிகள் பேச வேண்டாம். அஷ்டமத்து சனியால் திடீர் தடைகள் ஏற்படலாம்.

செய்ய வேண்டிய காரியங்களை கால காலத்தில செய்து முடிங்க. குடும்பத்தில் உங்களுக்கு சில சிக்கல்கள் குழப்பங்கள் ஏற்படும். காரணம் உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானத்தின் சனி பார்வை விழுவது பாதிப்பை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க.

வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. திடீர் விபத்துக்கள் வரலாம். இந்த வாரம் பெரியதாக எதிர்பார்ப்புகள் எதுவும் வேண்டாம்.

கடகம்

உங்க ராசியில் இருந்த சூரியன் புதன் இரண்டாம் வீட்டிற்கு இடம் மாறுகின்றனர். உங்க பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். கோபத்தை கட்டுப்படுத்துங்க. பேச்சில் கவனமாக இருப்பது அவசியம்.இந்த வாரம் திடீர் மாற்றங்கள் திருப்புமுனைகள் ஏற்படும்.

உங்க பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பது சிறப்பு. எந்த வேலையை தொட்டாலும் அது சட்டென்று முடியாமல் அலைச்சலை தரும்.

புதிதாக கடன் எதுவும் வாங்காதீங்க இது சரியான நேரமில்லை என்றாலும் வீடு மற்றும் வண்டி வாகனங்களை லோன் மூலம் வாங்கலாம். கண்டச்சனி காலம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.

சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. கணவன் மனைவிக்கு இடையே பேச்சில் கவனமாகவும் நிதானமாகவும் இருங்க.

சிம்மம்

ராசியில் ராசி நாதன் சூரியன் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. கூடவே புதனும் இணைந்து புத ஆதிபத்திய யோகத்தை தருகிறார்.

நினைத்த காரியம் நிறைவேறும். உங்க ராசிக்கு ஒன்று, ஐந்து, ஒன்பதாம் இடங்கள் வலுவடைந்திருப்பது சிறப்பு. பாக்ய ஸ்தான அதிபதி பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து உங்க விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானங்களை பார்ப்பது சிறப்பு. உங்க பிரச்சினைகள் அனைத்தும் தீரப்போகிறது.

காரியத்தடைகள் நீங்கும். வெற்றிகள் அதிகரிக்கும். உங்க தொழில் வியாபாரம் அற்புதமாக இருக்கும். நிறைய லாபம் கிடைக்கும். திடீர் பண வரவும் அதிர்ஷ்டமும் வரும். உங்க பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். சின்னச் சின்ன விரைய செலவுகள் வந்தாலும் வருமானம் பல மடங்காக இருப்பதால் உங்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. நீங்க எடுக்கப் போகிற முயற்சிகள் எல்லாம் வெற்றியில் முடிவடையும்.

குரு பார்வை கிடைப்பதால் திருமண முயற்சிகள் சுபமாக முடியும். உங்க வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மொத்தத்தில் இந்த வாரம் நன்மைகள் அதிகம் நிறைந்த வாரமாக அமையும்.

கன்னி

ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு விரைய ஸ்தான அதிபதி சூரியன் வந்து ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம்.

கூடவே புதனும் சஞ்சரிக்கிறார். புத ஆதிபத்திய யோகத்தினால் நீங்கள் வேலையில் செல்லும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சிலருக்கு வேலையில் திடீர் இடமாற்றம் கிடைக்கும். நிறைய சுப விரைய செலவுகள் வரலாம். செவ்வாய் எட்டாம் வீட்டில் பயணிக்கிறார்.

வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. திருமணம் சுப காரிய முயற்சிகளை ஒத்திப்போடுங்க. உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். என்னதான் உற்சாகமாக இருப்பது போல இருந்தாலும் ஒருவித பயத்தோடும் பதற்றத்தோடும் இருப்பீங்க.

குடும்பத்திலோ, வேலை செய்யும் இடத்திலோ வீண் வார்தைகளை விட வேண்டாம். கூடுமானவரை அதிகம் பேசாமல் இருப்பது குடும்பத்திலும் வேலையிலும் உங்களுக்கு ரொம்ப பாதுகாப்பாக இருக்கும்.

மாத முற்பகுதியில் நன்மைகள் அதிகமாக நடக்கும். மாத பிற்பகுதியில் சில சங்கடங்கள் ஏற்படும் கவனம் தேவை. பூர்வ புண்ணியத்தில் இருக்கிற சனி உங்க சந்தோஷத்தை அவ்வப்போது கெடுக்கப் பார்ப்பார் என்றாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

துலாம்

உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் புதனோடு இணைந்து ஆட்சி பெற்று அமர்ந்து நிறைய யோகத்தை கொடுக்கிறார். இதுநாள் வரை இருந்த மனக்குழப்பங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். உங்களுக்கு தொழில் வேலை வாய்ப்பு நன்றாக இருக்கும்.

செவ்வாய் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார் இதே போல சனி தனது பத்தாம் பார்வையால் உங்க ராசியை பார்க்கிறார். உங்களுக்கு வேலையில் இருந்த சங்கடங்கள் தீரும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

நிறைய நல்ல செய்திகள் உங்களுக்கு தேடி வரும். குரு பார்வை பெற்ற செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் இதுநாள் வரை உங்களை பாடாய் படுத்தி வந்த நோய் பிரச்சினைகள் நீங்கும். மனதாலும் உடல் ரீதியாகவும் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும்.

எதிர்கால படிப்புக்காக நீங்க செய்யும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். புத ஆதிபத்ய யோகத்தினால் கலைத்துறை சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

நீங்க விரும்பிய படிப்புகள் கிடைக்கும். பயணங்களில் கவனமாக இருங்க திருமண சுப காரிய முயற்சிகளில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பண்ணுங்க.

கணவன் மனைவி இடையே இருந்த சண்டைகள் நீங்கி சந்தோஷங்களும் அதிகரிக்கும். ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.

விருச்சிகம்

உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற சூரியன் உடன் புதன் இணைவது சிறப்பு. வேலையில் இடமாற்றம், சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். ரொம்பநாளாக தேர்வு எழுதி அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

அரசு தொடர்பான காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். இந்த வாரம் உங்களுக்கு நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். அபரிமிதமான பணவருமானத்தால் உங்க கடன்கள் அடைபடும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

உங்களுக்கு நிறைய பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த சின்னச் சின்ன கசப்புணர்வுகள் நீங்கும். அக்கம் பக்கத்தினரிடையே வீண் விவாதங்கள் ஏற்படும். எட்டில் சுக்கிரன் ராகு சாதகமாக இல்லை என்பதால் எதிர்காலத்திற்கான முக்கிய முடியவுகளை எடுக்காதீங்க.

திருமணம் சுப முயற்சிகளை எடுக்க வேண்டாம். காதல் வாழ்க்கையில் கசப்புணர்வுகளை ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்க. பணம் நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்காதீங்க அப்புறம் திரும்ப வர வாய்ப்பு இல்லை. இளம் பெண்கள் எதிர்பாலினத்தவர்களிடம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 06.04 மணி முதல் ஆகஸ்ட் 17,2020 நள்ளிரவு 12.53 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

தனுசு

இந்த வாரம் கிரகங்கள் சஞ்சாரம் கூட்டணி அற்புதமாக இருக்கிறது. குரு ராசியில் இருக்க ஐந்தாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று சஞ்சரிக்க, ஒன்பதாம் வீட்டில் சூரியன் ஆட்சி பெற்று புதனோடு இணைந்திருக்கிறார்.

இந்த கால கட்டத்தில் புது வேலைக்கு முயற்சி செய்யலாம். பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்ய ஸ்தானமும் வலுத்திருக்கும் போது அந்த இடத்தில் குருவின் பார்வையும் கிடைக்கிறது.

சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும், திருமணம், சுப காரிய முயற்சிகளில் சில தடைகள் ஏற்படலாம் என்பதால் அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டாம். மாணவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதம்.

உயர்கல்வி முயற்சியில் நன்மை நடக்கும். நினைத்த சப்ஜெக்ட் நினைத்த காலேஜில் படிக்க இடம் கிடைக்கும். ஆகஸ்ட் 17 ஆம் தேதி நள்ளிரவு 12.53 மணி முதல் ஆகஸ்ட் 19,2020 அதிகாலை 04.08 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது.

கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

மகரம்

உங்க ராசிநாதன் உங்க ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்க விரைய ஸ்தானத்தில் குரு, கேது, மூன்றாம் வீட்டில் இருக்கும் செவ்வாய் நான்காம் வீட்டிற்கு மாறுகிறார். ஆறாம் வீட்டில் சுக்கிரன், ராகு, ஏழாம் வீட்டில் உள்ள சூரியன் புதன் வார மத்தியில் எட்டாம் வீட்டிற்கு மாறுகின்றன.

இருக்கிற வேலையில் கவனமாக வேலை பாருங்க. மன உளைச்சல் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருங்க. குடும்ப விசயங்களில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவு கார சார விவாதம் ஏற்படும். பேச்சில நிதானமாக இருங்க.

கோபமாக பேச பேச பிரச்சினைகள்தான் அதிகமாகும். எச்சரிக்கையாக இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. திருமண சுபகாரியத்திற்கு முயற்சிகள் செய்ய வேண்டாம். தடைகள் ஏற்படலாம்.

காதல் சொல்வதற்கு இது ஏற்ற காலம் அல்ல. ஏழரை சனியில் ஜென்ம சனி நடப்பதால் நீங்க எச்சரிக்கையாக இருங்க. பயணங்கள் எதுவும் சாதகமாக இருக்காது.

வேகமாக போவதை விட நிதானமாக போங்க. பெற்றவர்களோட ஹெல்த் கவனம். மருத்துவ செலவு வரும். ஆகஸ்ட் 19 ஆம் தேதி அதிகாலை 04.08 மணி முதல் 2 நாட்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

கும்பம்

இந்த வாரம் உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. ஆட்சி பெற்ற சூரியன் பார்வையும், கூடவே பயணிக்கும் புதனின் பார்வையும் உங்களுக்குக் கிடைக்கிறது.

கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். செவ்வாய் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு சென்று மேஷம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சகோதர வகையில் உதவிகள் தேடி வரும். சிறு பயணங்களால் நன்மைகள் ஏற்படும். ஏழரை சனி நடைபெறுவதால் எச்சரிக்கையாக இருங்க. உங்களுக்கு இந்த மாதம் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்தாலும் அதை அசால்டாக சமாளிப்பீர்கள். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஏழாவது வீட்டின் மீது விழுகிறது.

திருமணம் சுப காரியங்களுக்காக முயற்சி செய்பவர்கள் இந்த வாரம் வரன் பேசி முடிக்கலாம். அதே நேரத்தில், பண முதலீடு, வேலை விசயமாக எந்த ஒரு பெரிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பாகவும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க நல்லதே நடக்கும்.

மீனம்

ஐந்தாம் வீட்டில் சூரியன் புதனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். வார மத்தியில் உங்க ராசிக்கு ஆறுக்கு அதிபதி சூரியன் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம். எதிரிகள் தொல்லை நீங்கும். எதிர்பாராத சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். திடீர் பண வரவு வரும்.

இதுநாள் வரை உங்க ராசியில் சஞ்சரித்த செவ்வாய் பகவான் வார மத்தியில் உங்க ராசிக்கு வாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். குருவின் பார்வையும் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு கிடைக்கிறது.

கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். புதிய சொத்துக்களை கூட்டாகவும் வாங்கலாம். இருக்கிற வேலையில் பிரச்சினை இல்லாமல் கவனமாக இருங்க. புதிய வேலைக்கு மாற முயற்சி செய்ய வேண்டாம்.

இப்ப இருக்கிற சூழ்நிலையில் வேலையை தக்க வைத்துக்கொள்வதே நல்லது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக பேசுங்க. லாப சனி உங்க வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுப்பார்.

திருமணம் தொடர்பான முயற்சிகளை செய்யலாம். குடும்பத்தில் எந்த குழப்பமும் இல்லை குதூகலமாக இருக்கும். அதே நேரத்தில் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும் கவனமாக இருங்க. மருத்துவ செலவுகள் வரும் எச்சரிக்கை.