இந்த 6 ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும்… ஆடி (தமிழ்) மாத ராசி பலன்கள்

0
766

ஆடி மாதம் சூரியன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தமிழ் ஆண்டின் நான்காவது மாதமான கடக மாதம் தட்சிணாயண புண்ணிய காலம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் காற்றும் மழையும் பூமி குளிர பெய்யும். ஆடி மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதம் ஆன்மீக அலைகள்

நிரம்பிய மாதம். ஆடி மாதத்தில் ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஆன்மீக அலைகள் நிறைந்த ஆடி மாத ராசிபலன்களைப் பார்க்கலாம்.

தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. இந்த மாதத்தில் சூரியன் கடகம் ராசி, செவ்வாய் மீனம் ராசி, புதன் மிதுனம் ராசி ஆடி 17க்கு மேல் கடக ராசி, குரு தனுசு ராசி, சுக்கிரன் ரிஷபம் ராசி ஆடி 16க்கு மேல் மிதுனம் ராசி, சனி மகரம் ராசி, ராகு மிதுனம் ராசி, கேது தனுசு ராசி என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது.

ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம் ஆடி மாதம் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும் இந்த மாதம் திருவிழாக்கள் கொண்டாட்டங்கள் இன்றி கோவிலுக்குள் மட்டுமே நடைபெறப்போகின்றன. ஆடி மாதத்தை பீடை மாதம் என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், பீட மாதம் என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது. ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.. ஆன்மீக மாதமான ஆடி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்கு ஆடி மாதம் அற்புதமான மாதம், ஆடி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன், இரண்டாம் வீட்டில் சுக்கிரன், மூன்றில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, குரு, பத்தாம் வீட்டில் சனி, 12ஆம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கிரகங்களின் மாற்றத்தின் படி மாத பிற்பகுதியில் புதன் நான்காம் வீட்டிற்கும் சுக்கிரன் மூன்றாம் வீட்டிற்கும் நகர்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்திற்கு ஏற்ப மேஷம் ராசிக்கு நிறைய நன்மைகள் நடைபெறப் போகின்றன. சூரியன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மாத பிற்பகுதியில் சுக்கிரன் இடப்பெயர்ச்சி நன்மையை கொடுக்கப் போகிறது. ராகு உடன் சுக்கிரன் உடன் இணைகிறார். புதன் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மாத கடைசியில் உங்க ராசி நாதன் உங்க ராசிக்கு வருகிறார். இந்த மாதம் உங்களின் வருமானம் அதிகரிக்கும். பணப்பிரச்சினை தீரும், தன லாபம் வருவதால் வங்கி சேமிப்பு உயரும்.

புதன் மூன்றாம் இருப்பதால் தைரியம் தன்னம்பிக்கை கூடும். மாத இறுதியில் சுக்கிரன், புதன் இடம்மாறுவது கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குருபார்வை நன்மையை கொடுக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வர ஆசைப்படுபவர்களுக்கு அந்த எண்ணம் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் இருந்த வீண் பழி நீங்கும். சிலருக்கு மாத பிற்பகுதியில் புதிய வேலை கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆடி 18ஆம் தேதிக்கு மேல் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிறைவேறும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும் மனமும் உடம்பும் உற்சாகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். இல்லத்தரசிகளுக்கு நன்மையான மாதம். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபடுங்க நிறைய நன்மைகள் நடக்கும். ஆடி அமாவாசையில் தானம் பண்ணுங்க. அன்னையின் ஆசி கிடைக்கும். சுபகாரியத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் இந்த மாதம் உங்க ராசிக்குள் சுக்கிரன், இரண்டாம் வீட்டில் ராகு,மூன்றாம் வீட்டில் சூரியன், அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு, ஒன்பதாம் வீட்டில் சனி, லாப வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கிரகங்களின் மாற்றத்தின் படி மாத பிற்பகுதியில் புதன் மூன்றாம் வீட்டிற்கும் சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கும் நகர்கின்றன. ஆடி மாதம் கவலைகள் நீங்கும் மாதமாக அமையப்போகிறது. உங்க ராசிநாதன் இதுநாள் வரை உங்க ராசியில் இருந்தார். மாத பிற்பகுதியில் ராசி நாதன் இரண்டாம் வீட்டிற்கு நகர்ந்து ராகு உடன் இணைகிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நோய் பாதிப்புகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சூரியன், புதன் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் இணைவது சிறப்பு. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். உங்களின் தன்னம்பிக்கை தைரியம் கைகூடி வரும். திடீர் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகம் அதிகரிக்கும். பெண்கள் இல்லத்தரசிகளுக்கு சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். பயம் பதற்றம் நீங்கும். வீட்டில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சமூகத்திலும் குடும்பத்திலும் மதிப்பு மரியாதை கூடி வரும். வேலைக்கு செல்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும் தலைமை பதவி தேடி வரும். சிலருக்கு திடீர் வேலை வாய்ப்பு வரும், கல்யாண யோகம் கை கூடி வரப்போகிறது. பண வரவு நன்றாக இருக்கும். சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடக்கும் மாதமாக ஆடி மாதம் அமைகிறது. ஆடிப்பூர நாளில் ஆண்டாள் வழிபாடு செய்வது சிறப்பு. உங்களின் தேவைகள் நிறைவேறும். ஆடி போய் ஆவணி வந்தா உங்க வாழ்க்கை டாப்தான்.

மிதுனம்

மிதுனம் ராசிக்குள் ராகு,புதன், இரண்டாம் வீட்டில் சூரியன், ஏழாம் வீட்டில் குரு, கேது, எட்டாம் வீட்டில் சனி, பத்தாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க ராசிக்குள் இருந்து மாத பிற்பகுதியில் புதன் இடப்பெயர்ச்சியாகி இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார். அதே போல உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் உங்க ராசிக்கு வந்து ராகு உடன் இணைவது சிறப்பு. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றம் காரணமாக ஆடி மாதம் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறப் போகிறது. ராகு நிறைய குழப்பங்களை கொடுத்து வந்தார் இனி அந்த சிக்கல்கள் தீரப்போகிறது. பத்தில் செவ்வாய் பதவியை தரப்போகிறார். சுக்கிரன் உங்க ராசிக்கு வந்து ராகு உடன் இணைவது சிறப்பு. நிறைய சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும் உற்சாகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். சிலருக்கு திடீர் வேலை வாய்ப்புகளும் தேடி வரும். உங்களுக்கு இதுநாள் ஏற்பட்டிருந்த தடைகள் தாமதங்கள் நீங்கும். மாத பிற்பகுதியில் புதிய வாய்ப்புகள் தேடி வரும் பயன்படுத்திங்க. சிலருக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பெண்களுக்கு இந்த மாதம் அற்புதமாக இருக்கப் போகிறது. குழப்பங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். விஐபிக்களின் அறிமுகம் தேடி வரும். கடன் பிரச்சினைகள் தீரும். உங்க ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. சிலருக்கு புத்திர பாக்கியமும் கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடுங்க நிறைய நன்மைகள் நடைபெறும். மகா சனிப்பிரதோஷ நாளில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்க. நந்திபகவானை நினைத்து வழிபடுங்க. ஆடி அமாவாசை நாளில் கோவிலில் தானம் பண்ணுங்க. பாதிப்புகள் நீங்கி நிறைய நல்லது நடக்கும்.

கடகம்

கடகம் ராசிக்குள் சூரியன், ஆறாம் வீட்டில் குரு கேது, ஏழாம் வீட்டில் சனி, ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் ராகு புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கடகம் ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் மகிழ்ச்சிகள் நிறைந்த மாதமாக அமையப்போகிறது. சந்தோஷமான சம்பவங்கள் நிறைய நடைபெறும். இந்த மாதம் உங்க ராசியில சூரியன் சஞ்சரிப்பது சிறப்பு. மாத பிற்பகுதியில் புதன் உங்க ராசிக்கு வந்து சூரியனோடு இணைகிறார். உங்க முயற்சிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். இதுநாள்வரை பட்ட கஷ்டங்கள் தீரும். பணக்கஷ்டங்கள் நீங்கும் வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும் அதன் மூலம் நன்மைகள் நடைபெறும். முன் கோபத்தை குறைத்து நிதானமாக இருங்க. வேலைக்கு செல்பவர்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பதவி உயர்வுடன் சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு திடீர் வேலை வாய்ப்பு தேடி வரும் பயன்படுத்திக்கங்க. வருமானம் வருவது போல செலவுகளும் தேடி வரும். சிக்கனமாக செலவு பண்ணுங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன உரசல்கள் வந்து கொண்டுதான் இருக்கும். இந்த மாதம் திருமணம் சுப காரிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். அதற்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். சனிப்பிரதோஷ நாளில் நீங்க மறக்காம சிவ பெருமானை வணங்குங்கள். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து அவர்களை நினைத்து வழிபடுங்க. ஆடி அமாவாசை நாளில் அம்மா இல்லாதவர்கள் அம்மாவிற்கு பிடித்த உணவுகளை படைத்து வழிபடுங்க. சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்க.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் லாபகரமான மாதமாக அமையப்போகிறது. அதே நேரத்தில் சில சாதங்களும் சில பாதகங்களும் நடைபெறப்போகிறது. உங்க ராசி நாதன் சூரியன் விரைய ஸ்தானத்தில இருக்கிறார். லாப ஸ்தானத்தில் ராகு, புதன், பத்தாம் வீட்டில் சுக்கிரன், எட்டில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் புதன், கேது, ஆறாம் வீட்டில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. எந்த காரணத்திற்காகவும் கோபப்படாதீங்க கோபத்தோடு எழுபவன் நஷ்டப்பட்டுதான் உட்கார வேண்டியிருக்கும் என்பதால் கவனமாக இருங்க. பொறுமையாக பேசுங்க. வண்டி வாகனத்தில் போகும் போது நீங்க எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் போகணும் காரணம் எட்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பது சிறப்பானதல்ல. குரு பகவான் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். மாத பிற்பகுதியில் கிரகங்களின் இடமாற்றத்தினால் நிறைய லாபம் வரும். லாப ஸ்தானத்தில் உள்ள ராகு உடன் சுக்கிரன் இணையப்போகிறார். உங்க தொழில் ஸ்தான அதிபதி லாப ஸ்தானத்திற்கு வருவது சிறப்பு தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் பங்குச்சந்தை முதலீடுகளில் பல மடங்கு லாபம் வரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் நீங்க மறக்காமல் இந்த மாதம் அதற்கான முயற்சி பண்ணுங்க, வெற்றிகரமாக முடியும். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கொரோனா லாக்டவுன் காலத்தில் பட்ட கஷ்டத்திற்கு இனி உங்களுக்கு நல்லது நடக்கும். பெண்களுக்கு இல்லத்தரசிகளுக்கு நன்மைகள் நடைபெறும். உறவினர்களுடன் கூடி மகிழ்வீர்கள். கணவரின் ஆதரவு கிடைக்கும். முருகப்பெருமானை வணங்குங்கள்.

கன்னி

கன்னி ராசிக்கு இந்த மாதம் நிறைய நல்ல விசயங்கள் நடக்கப் போகிறது. ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், ராசி நாதன் புதன் தொழில் ஸ்தானத்தில் ராகு உடன் இணைந்து இருக்கிறார். மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் தீரும். உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சுக்கிரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நான்காம் வீட்டில் குரு, கேது, ஐந்தாம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சாரம் அமைந்துள்ளது. மாத பிற்பகுதியில் உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்திற்கு சுக்கிரன் இடப்பெயர்ச்சி ஆவது சிறப்பு. பத்தில் சுக்கிரன் பதவி உயர்வையும் வருமான உயர்வையும் கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இதுநாள்வரை வேலை போய்விடுமோ ஏதும் பிரச்சினை வந்து விடுமோ என்ற பயத்தோடும் பதற்றத்தோடும் இருந்திருப்பீர்கள். இனி உங்களுக்கு மனதில் இருந்த பயமும் பதற்றமும் தீரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் சரியாகும். நீங்க எதிர்பார்க்காத வகையில் திடீர் அதிர்ஷ்டங்கள் வரும். கவலைகள் தீரும் காலம் வந்து விட்டது. எந்த வாய்ப்பு வந்தாலும் தட்டிப்போகுதேன்னு கவலையில இருந்தீங்க இனி நல்லதே நடக்கும். சிலருக்கு பயம் நீங்கி நல்லதே நடக்கும். உங்க மேல சிலர் வீண் பழி சுமத்தியிருக்கலாம். அந்த பழியை துடைத்து வெற்றிநடை போடப்போகிறீர்கள். நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்ககூடிய மாதமாக அமைந்துள்ளது. இந்த மாதம் அம்மாவுடைய குல தெய்வத்தை நினைத்து வழிபடுங்க நல்லது நிறைய நடக்கும்.