இந்த 6 ராசிக்காரர்களையும் காதலித்து ஏமாற்றிவிடாதீர்கள்… உங்கள் வாழ்க்கையை சின்னாபின்னம் ஆக்கிவிடுவார்கள்

0
913

பழிவாங்குவது என்பது காயம் மற்றும் கோபத்தை வெளிப்படுத்தும் சிறந்த வழியாகுமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் பழிவாங்கும் எண்ணம் என்பது அனைத்து மனிதர்களுக்குள்ளும் இருக்கும் ஒரு குணமாகும். குறிப்பாக அதிக மனக்காயங்களை ஏற்படுத்தும் முன்னாள் காதலன்/காதலியை பழிவாங்க அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது நினைத்திருப்பார்கள்.

சிலர் இந்த எண்ணத்தை வெறும் எண்ணத்தோடு நிறுத்திக் கொள்வார்கள். சிலர் தீவிரமாக செயலில் இறங்கி பழிவாங்கும் செயலை செய்வார்கள். இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலன்/காதலியை பழிவாங்காமல் விடமாட்டார்கள் என்று பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் முன்னாள் காதலர்களை துன்புறுத்தாமல் விட்டுவிடுவார்கள் என்று நினைத்தால் அது தவறான ஒன்றாகும். விருச்சிக ராசிக்காரர்களிடம் செய்யக் கூடாதா இரண்டு விஷயம் ஒன்று பொய் சொல்வது மற்றொன்று துரோகம் செய்வது. இதில் ஏதேனும் ஒன்று நடந்தாலும் அவர் நிச்சயம் பழிவாங்குவார். இவர்கள் எவ்வளவு காலம் வேண்டுமென்றாலும் பொறுமையாக காத்திருந்து கவனமாக பழிவாங்குவார்கள். இவர்கள் பழிவாங்கும்போது அது மிகவும் கச்சிதமாக அவர்களின் ஸ்டைலில் இருக்கும்.

மேஷம்
மேஷம் ஒரு நெருப்பு அறிகுறி மற்றும் அவர்கள் ஒரு பொல்லாத மனநிலையைக் கொண்டுள்ளனர், எனவே அவர்கள் தங்கள் முன்னாள் காதலர் மீது கோபத்தில் இருந்தால், பழிவாங்கும் வரை ஓயமாட்டார்கள். இவர்களின் பழிவாங்குதலில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இவர்கள் எப்பொழுதும் உடல்ரீதியாக பழிவாங்க மாட்டார்கள், ஆனால் அதைவிட மோசமான பாதிப்பை உளவியல்ரீதியாக ஏற்படுத்துவார்கள். பெரும்பாலும் இவர்கள் அவர்கள் பழிவாங்க விரும்புபவர்களின் சமூக அந்தஸ்தை சீர்குலைப்பார்கள்.

கும்பம்
கும்பம் மோசமான முறிவுக்கு ஆளாகும்போது, பழிவாங்குவது அவர்களின் திட்டவட்டமான ஒரே விருப்பமாக இருக்கும். இவர்கள் நோர்மலாக இருப்பது போலவே தோன்றும், ஆனால் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் இவர்கள் பழிவாங்கத் தொடங்குவார்கள். முன்னாள் காதலியை அவர்கள் விருப்பங்களை நிர்மூலமாக்குவது, அவநம்பிக்கை அடையச்செய்வது போன்ற உளவியல்ரீதியாக வேட்டையாடுவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் பழிவாங்கல் என்பது அவர்கள் ஒருபோதும் தங்களின் முன்னாள் காதலரை விடமாட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்களை துரத்துவார்கள், மீண்டும் அவர்களை காதலிக்க வைப்பார்கள் அதன்பின் அவர்களை விட்டுவிடுவார்கள். தங்களை ஏமாற்றியவர்களுக்கும், விட்டு சென்றவர்களுக்கும் அதிக வலியை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கமாகும். தங்கள் முன்னாள் காதலர்களை திரும்ப பெறுவதற்கு எவ்வளவு காலமானாலும் காத்திருப்பார்கள் ஏனெனில் அந்த காலம் இவர்களுக்கு மதிப்பானதுதான்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள், எனவே அவர்கள் பழிவாங்க விரும்பினால் தங்கள் முன்னாள் காதலிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வழி எதுவென்று நன்கு அறிவார்கள். “நன்றாக வாழ்வதே சிறந்த பழிவாங்கும்” என்ற பழைய பழமொழியைப் போல இது எளிமையாக இருக்கலாம். இவர்களின் காதல் முறிந்து விட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்தது போலவே இவர்கள் கட்டிக்கொள்ள மாட்டார்கள், அவர்களை காதலித்தது போலக்கூட நடந்து கொள்ளமாட்டார்கள். இவர்கள் உண்மையில் தங்களை காதலித்தார்களா என்ற சந்தேகமே அவர்களுக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு அவர்களை புறக்கணிப்பார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலரை பழிவாங்க முடிவுசெய்துவிட்டால் அதற்காக ஆள் சேர்க்கத் தொடங்குவார்கள். அவர்களுக்கு நெருக்கமானவர்களோடு நட்பை வளர்த்துக் கொள்வார்கள். எனவே தங்கள் முன்னாள் காதலரின் முட்டாள்தனம், மோசமான நடத்தை போன்றவற்றை வெளிப்படுத்தி அவர்களின் நெருக்கமானவர்களுக்கு முன் அவமானப்படுத்துவார்கள். அவர்கள் ஒரு பாதிக்கப்பட்டவரைப் போலவோ அல்லது பழிவாங்குவதாகவோ இல்லாமல் இதைச் செய்வார்கள்.