இனி சாராயப் போத்தல்களுக்கு பணம் வைப்பு செய்ய வேண்டும்

0
7

180 மில்லிலீற்றர் சாரயப்போத்தல்களுக்கு வைப்பு பணம் செலுத்த வேண்டிய முறை ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கலால் வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வெற்று மதுபான தகரப்பேணிகளை நசுக்குவதற்கும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்பாக இயந்திரங்களை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த வருடத்தின் புள்ளிவிபரங்களுக்கு அமைய 300 மில்லியனுக்கு அதிகமான மதுபான போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதோடு, தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மதுபானம் 160 மில்லியன் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த போத்தல்கள் மீள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படாமல் சூழலில் வீசப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கே இந்த முறை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.