இன்றுமட்டும் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று

0
5

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றுமட்டும் புதிதாக 17 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி இதுவரை தொற்று உறுதியானவர்களில் மூன்றுபேர் ஒம்மனில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் 02 பேர் இராஜாங்கனை, லங்காபுர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சேனபுர மறுவாழ்வு நிலையத்தில் உள்ள நான்கு பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, 664 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 120 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.