இன்றைய போட்டியில் வெல்ல CSK இதை பண்ணா மட்டும்தான் முடியும்… ஆனால் தோனி அதை செய்வது சந்தேகம்தான்!

0
29

ஐபிஎல் போட்டியில் கடந்த காலங்களில் எதிரணிகளுக்கு மாபெரும் சிம்ம சொற்பனமாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 2020 ஐபிஎல் போட்டிகளில் வெற்றி கனியை சுவைப்பதற்கு மிகவும் போராடி வருகின்றது.

2020 ஐபிஎல் தொடரை மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றியுடன் ஆரம்பித்தது. ஆனால் அப் போட்டியில் கூட சென்னையின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் திருப்தி அளிக்கவில்லை. அது என்னவோ உண்மைதான், நிறைய சொதப்பல்களின் மத்தியில்தான் சென்னை மும்பையை வீழ்த்தியது.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற போது இம் முறை கிண்ணம் எமக்குத்தான் என கற்பனைக்கோட்டை கட்டிய ரசிகர்களது நம்பிக்கையை உடைத்தெறிந்துவிட்டனர் சென்னை வீரர்கள் அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து.

ஆனாலும் சென்னையின் 2020 ஐபிஎல் பயணம் இவ் மூன்று தோல்வியுடனும் முடிந்துவிடப்போவதில்லை. காயம் கொண்ட சிங்கம் கர்ஜித்துக் கொண்டு மீண்டு எழுவது போல கிங்ஸ் லெவன் பஞ்சாப் உடனான இன்றைய போட்டியில் வென்று தமது வெற்றிப்பயணத்தை தொடர வேண்டும் என்று அனைத்து சென்னை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

இன்றைய போட்டியில் வெல்ல தோனியும் சென்னை வீரர்களும் அப்பிடி என்னதான் பண்ணணும்..? இந்த வீடியோவை பாருங்க