இம்முறை அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் அரசாங்கம் நெருக்கடி

0
7

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் அரசாங்கம் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது வரையில் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் முழுமைான சம்பளம் வழக்குவது குறித்து அனைவரும் ஆச்சரியப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளோம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமைக்கு காரணம் குறித்து ஊடகவியலாளர் வினவிய போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கோடிக் கணக்கிலான மக்கள் தங்கள் தொழிலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளளனர். மேலும் பல லட்சம் பேர் குறைந்த சம்பளம் பெற்று வருகின்றனர்.

இன்று வரையில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.