இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு…

0
10

 இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் உத்தியோகப்பூர்வ ஆவணத்திற்கிணங்க இது உறுதியாவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பெறுபேறுகளுக்கமைய பரீட்சார்த்திகள் நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொண்ட இடங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வௌியாகின.

www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும்.