இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு இயற்கை உரம் பயன்படுத்தப்பட்டதா? சபையில் சஜித் கேள்வி

0
7
8 / 100

அரிசியை நீங்கள் அண்மையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தீர்கள் என்றும் குறித்த அரிசி உற்பத்திக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இயற்கை உரம் பயன்படுத்தப்பட்டதா என ஆராய்ந்த பின்னரா இறக்குமதி செய்தீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வினா தொடுத்துள்ளார்.

நாங்கள் அரிசி மாத்திரமன்றி அதிகமான பொருட்களை இறக்குமதி செய்கிறோம் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் பால் மாவையும் இறக்குமதி செய்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் சொல்வது போல அரிசி இறக்குமதி போன்று பால்மா, நெத்திலி மற்றும் மாசி இயற்கை உரத்தைப் பயன்படுத்திக் கொண்டு வர வேண்டும் என்றும் நாங்கள் அரிசியை இறக்குமதி செய்ய விரும்பவில்லை என்றும் வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய யோசனை முன்வைத்தமைக்கு ஜனாதிபதி தன்னை ஏசினார் என்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கோரிக்கையை மீறி விவசாயிகள் நெல்லை விற்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சந்தைகளில் அரிசிப் பற்றாக்குறை நிலவியது. மக்களைப் பட்டினி போட முடியாத காரணத்தால் அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டி யிருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் தற்போது இயற்கை முறையில் இறக்குமதி செய்ய முடியாது என்றும் நாடு தன்னிறைவு அடையும் வரை அதைச் செய்ய முடியாது என்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் வழங்கியுள்ளார்.