இலங்கைக்கு வருகை தரும் முதலாவது சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வர அனுமதி

0
9

விமான நிலையங்களின் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்த பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதலாவது சுற்றுலாப் பயணிகள் அணிக்கு, நாட்டுக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் 200 பேர் கொண்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானங்களுக்கு வருகை தரவுள்ளனர்.

இதனிடையே எதிர்வரும் 26 ஆம் திகதி பின்னர் நாடு திரும்பும் இலங்கையர்கள், வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாடு திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தர்மதாச குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல மாதங்களாக விமான நிலையங்களின் விசேட விமான சேவைகள் மாத்திரம் நடத்தப்பட்டு வருகின்றன. சாதாரண பயணிகள் விமான சேவைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.