இலங்கையின் அனர்த்த முகாமை தரத்தை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவியளிக்கும் என்று தெரிவிப்பு

0
19

இதன் ஒரு கட்டமாக அமெரிக்கா அரசாங்கத்தின் உதவி நிறுவனமான யு.எஸ்.எய்ட் சர்வோதய சிரமதான அமைப்புக்கு 1.5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

இதன் மூலம் உள்ளூர் சமூக தலைவர்களின் அபிவிருத்தியை சர்வதேச நிவாரண நிறுவங்களுடன் ஊடாக அடுத்த இரண்டு வருடங்களுக்கு மேம்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்கா மக்கள் இலங்கைக்கு அனர்த்த முகாமை உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிர்களை பாதுகாப்பது, சமூக பொருளாதார பாதிப்புக்களை குறைப்பது போன்ற நடவடிக்கைகள் இதன்மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் எதிர்வரும் வருடங்களில் இலங்கையின் அனர்த்த முகாமை தரத்தை உயர்த்த அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று அமெரிக்கா தூதுவர் எலைய்னா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையிலும் அமெரிக்கா அரசாங்கம் இலங்கையின் அனர்த்த முகாமை தரத்தை மேம்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழச்சித்திட்டத்துக்கு 550,000 டொலர்களை வழங்கியது.

2020 ஜூன் மாதத்தில் அமெரிக்கா அரசாங்கம் பருவப்பெயர்ச்சி காலத்துக்கான முன்னேற்பாடுகளுக்காக 2400 தண்ணீர் தாங்கிகளை வழங்கியிருந்தது.