முஸ்லிம்களுக்கு ஆதரவாக மனோகணேசன்

0
23
50 / 100

இலங்கையில் மட்டுமே கொவிட்-19 நோய்த் தொற்றினால் மணிப்போர் தகனம் செய்யப்படுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்கு இலக்காகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிப்பதனை எதிர்த்து கொழும்பில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த மனோ கணேசன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்கள் அடக்கம் செய்யப்படுவதாகவும் முஸ்லிம் அல்லாத நாடுகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இந்த அரசாங்கம் கொவிட்டினால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய மறுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.