இலங்கையில் மிகவரைவில் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு?

0
11
7 / 100

இலங்கையில் மிகவரைவில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு நிலவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் எரிவாயு விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு சிலிண்டருக்கு 750 ரூபா வரை நட்டம் ஏற்பட்டு வருவதாக கேஸ் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக சிலிண்டர்களின் விலைகளை 650 ரூபாவரை அதிகரிக்க கேஸ் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

எனினும் நிறுவனங்களின் கோரிக்கைக்கு இதுவரை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடமிருந்து உரிய பதில் அளிக்கப்படாத காரணத்தினால் உற்பத்திகளை குறைக்க கேஸ் நிறுவனங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.