இலங்கையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பிரசவித்த தாய்!

0
1
12 / 100

இலங்கையில் முதல் முறையாகத் தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இச்சம்பவம் இன்று ­­­அதிகாலை பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 12.16 முதல் 12.18 வரை சிசேரியன் மூலம் இக்குழந்தைகள் பிறந்துள்ளன.

அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான தாய் ஒருவரே, ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆண் குழந்தைகளையும், 3 பெண் குழந்தைகளையும் குறித்த தாய் பிரசவித்துள்ளார்.

இவற்றில் இரண்டாவதாகப் பிறந்த குழந்தை மாத்திரம் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள தாகவும், ஏனைய குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.