இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி!

  0
  5
  7 / 100

  இருபதுக்கு 20 உலகக் கிண்ண குழு நிலை சுற்றில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

  அபுதாபியில் நடைபெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

  இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

  இந்நிலையில் 97 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 13.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.

  இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மஹீஷ் தீக்ஷன தெரிவானார்.

  எண்ணிக்கை சுருக்கம்

  துடுப்பாட்ட சுருக்கம்

  நமீபியா அணி

  கிரைக் வில்லியம்ஸ் 29 ஓட்டங்கள்

  ஜெரார்ட் இரஸ் மஸ் 20 ஓட்டங்கள்

  இலங்கை அணி

  பானுக ராஜபக்ச 42 ஓட்டங்கள்

  அவிஷ்க பெர்னாண்டோ 30 ஓட்டங்கள்

  பந்துவீச்சு சுருக்கம்

  இலங்கை அணி

  மஹீஷ் தீக்ஷன 25 -3

  லஹிரு குமார 9 -2

  வனிந்து ஹசரங்க 24 -2

  துஷ்மந்த சாமீர 19 -1

  சாமிக்க கருணாரத்ன 17 -1

  நமீபியா அணி

  ரூபென் ட்ரும்பெல்மன் 27 -1

  பெனார்ட் ஸ்கொட்ஸ் 16 -1

  ஜே.ஜே. ஸ்மிட் 7 -1