இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் சிறிதரன் எம்.பி கருத்து

0
36

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தமைக்காக அவர் கட்சித்தலைமைப் பொறுப்பிலிருந்து விலகவேண்டும் என்ற அவசியமெதுவும் இல்லை. தேர்தல் முடிவடைந்தவுடன் பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது வழமையானதாகும். எனவே கட்சியின் தலைமைத்துவத்தில் உடனடியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக நான் கருதவில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

2020 ஆகஸ்ட் 5 பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் 10 ஆசனங்களையே பெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலில் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என்பதுடன் கூட்டமைப்பிற்குள் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விமர்சனங்களும் அரசியல் அவதானிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா பாராளுமன்றத்திற்குத் தெரிவாகாத நிலையில், அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்ற எஸ்.சிறிதரனை கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இத்தகைய கருத்தாடல்கள் தொடர்பில் சிறிதரனின் நிலைப்பாடு என்னவென்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் பல்வேறு தரப்பினரும் வௌ;வேறு விமர்சனங்களை முன்வைப்பார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், அதற்கான உடனடியாகக் கட்சிக்குள் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.