இலங்கை தமிழர்களுக்கு ஓர் நற்செய்தி

0
472

19ஆவது திருத்தச்சட்டம் இரத்துச் செய்யப்படாது. அதில் சில மாற்றங்கள் மாத்திரமே செய்யப்படுமென நீர் வழங்கல் மற்றும் வடிகால் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய சூழ்நிலையில் அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் இரத்துச் செய்யப்படாது.

எனினும் அதில் சில மாற்றங்களை செய்வதற்கு தீர்மானித்துள்ளோம். புதிய குடியரசு அரசியல் அமைப்பைக் கொண்டிருப்பது நம்பிக்கை என்று நான் நினைக்கிறேன்.

இந்த விடயம் தொடர்பாக நாம் யாரும் இதுவரை பேசவில்லை. உடன்படிக்கைக்கு வரவும் இல்லை.
அத்துடன் இந்த வாக்களிப்பு முறைமையை நீக்கி, தொகுதி விகிதாசார முறைமையை ஏற்படுத்துவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.